அட 1 கப் பச்சரிசியை வைத்து இவ்வளவு மொறுமொறுப்பாக, இவ்வளவு ஆரோக்கியமாக போண்டா செய்ய முடியுமா என்ன? இத்தனை நாளா இந்த ரெசிபி தெரியாமல் போய்விட்டதே?

bonda
- Advertisement -

இன்னைக்கு ஈவினிங் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது. வீட்டில் எதுவுமே இல்லையே, என்று யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு அருமையான போண்டா ரெசிபி. உங்களுடைய வீட்டில் பச்சரிசி அவல் இருக்குதா. யோசிக்காமல் இந்த போண்டாவை செஞ்சி அசத்துங்க. இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இருக்காது. தேவைப்பட்டால் ஒரு தேங்காய் சட்னி கார சட்னியை வைத்து பரிமாறலாம். கூட ஒரு டீ மட்டும் இருந்து விட்டால் போதும். சாயங்கால வேலை சந்தோஷமாக நகரும். ருசி தரும் பச்சரிசி போண்டா எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

பச்சரிசி 1 கப், அவல் 1 கப், தயிர் 1/2 கப், ஒரு சின்ன டம்ளரை எடுத்துக் கூட இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் சரியாக அளந்து கொள்ளுங்கள். இந்த போண்டாவுக்கு அளவுகள் மிக மிக முக்கியம்.

- Advertisement -

முதலில் பச்சரிசியை 3 முறை கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பிறகு அவல், இரண்டு மூன்று முறை நல்ல தண்ணீரில் அலசிவிட்டு, தண்ணீரை சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இல்லை என்றால் அவலை மட்டும் பிழிந்து தனியாக ஒரு பௌலில் போட்டு, எடுத்து வைத்திருக்கும் 1/2 கப் தயிரை அவலில் ஊற்றி கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அரிசி நன்றாக ஊறி வந்த பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரிசி அரைபட்டு வந்ததும் ஊற வைத்திருக்கும் அவலையும், அந்த மாவோடு போட்டு அரைத்துக் கொள்ளவும். மாவு இட்லி மாவு பதத்திற்கு அரைத்தால் போதும்.

- Advertisement -

ரொம்பவும் தண்ணீராக அரைக்க வேண்டாம். ரொம்பவும் கட்டியாகவும் அரைக்க வேண்டாம். அரைத்த இந்த மாவை ஒரு அகலமான பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு போண்டா மாவு தயாராக இருக்கிறது அல்லவா. இதில் ஒரு சில பொருட்களை சேர்க்க வேண்டும்.

அரைத்து தயாராக வைத்திருக்கும் மாவில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, தேவைப்பட்டால் கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழையை போட்டு, நன்றாக கலக்குங்கள்.

- Advertisement -

மாவு ரொம்பவும் திக்காக இருந்தால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த போண்டாவுக்கு ஆப்ப சோடா மாவு தேவை கிடையாது. ஏனென்றால் தயிர் ஊற்றி தான் அவல் ஊற வைத்திருக்கின்றோம். (கேரட் துருவல் வேண்டாம் என்றால் தவிர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகளை போண்டாவோடு சேர்த்து செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள் அல்லவா.)

இதையும் படிக்கலாமே: இந்த ரகசியம் தெரிஞ்சா இனி மிக்ஸியிலேயே 10 நிமிடத்தில் சுலபமாக மொறு மொறுன்னு கிரிஸ்பியான வடை நாமும் தயாரிக்கலாமே!

மாவு தயாரானதும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் இந்த போண்டா மாவை கையால் எடுத்தும் போண்டா விடலாம். அப்படி இல்லை என்றால் குழி கரண்டியில் அள்ளி, அப்பம் போல எண்ணெயில் வார்த்து கூட போண்டாவை சுட்டு எடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம். போண்டா எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொரிந்து வந்ததும் எடுத்து ருசித்துப் பாருங்கள். உங்களுக்கே இதனுடைய டேஸ்ட் தெரியும். அருமையான போண்டா ரெசிபி. உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -