ஒரே நாளில் உங்களுடைய முகம் பளிங்கு கல் போல பள பளப்பாக ஜொலிக்க 1 ஸ்பூன் பச்சரிசி போதும். ட்ரை பண்ணி பாருங்க. 10 நிமிடத்தில் அடையாளம் தெரியாமல் மாறி போயிடுவீங்க.

face
- Advertisement -

நம்முடைய முகம் கை கால் உடல் முழுவதுமே உடனடியாக வெள்ளையாக மாற வேண்டும் என்றால் இந்த குறிப்பு உங்களுக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே இந்த பேக்கை சுலபமாக தயார் செய்துவிடலாம். மேக்கப் போடாமலேயே உங்களுடைய முகம் மேக்கங போட்டது போல நிச்சயம் 10 நிமிடத்தில் மாறும். இதை ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி ரிசல்டை கண்ணாடி முன்னாடி பாருங்கள்.

முதலில் 2 டேபிள் ஸ்பூன் அளவு பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு முறை நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். இந்த அரிசியை ஊறவைத்த தண்ணீருடன் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி வரக்கூடிய பச்சரிசி தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய பச்சரிசி திப்பி இருக்கும் அல்லவா, அதை மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது பச்சரிசியை அரைத்து எடுத்த வெள்ளையான பச்சரிசி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வையுங்கள். அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்து கைவிடாமல் கலந்து கொடுக்க, இந்த தண்ணீர் அப்படியே கட்டியாக மாறும். தண்ணீராக இருப்பது கட்டிய உடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவையை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். இதை அப்படியே முகத்தில் அப்ளை பண்ண முடியாது. கொஞ்சம் கட்டியாக தான் இருக்கும்.

இந்த வெள்ளை பச்சரிசி மாவுடன் கொஞ்சமாக தயிர், கொஞ்சமாக காய்ச்சாத பாலை ஊற்றி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். கட்டிகள் இல்லாமல் இதை தளதளவென க்ரீமி பக்குவத்திற்கு கொண்டு வாங்க. இதை அப்படியே ஒரு கண்டெய்னரில் ஸ்டோர் செய்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் தயார் செய்த இந்த க்ரீமை உங்களுடைய முகம் கைகளில் நன்றாக திக்காக அப்ளை செய்து கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு முகம் கைகளை இந்த கிரீமோடு 10 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, நல்ல தண்ணீரில் கழுவி பாருங்கள். முன்பு இருந்த உங்களுடைய கைக்கும் முகத்திற்கும் இப்போது இருக்கக்கூடிய முகத்திற்கும் நிச்சயம் வித்தியாசம் தெரியும். நீங்க நம்ப மாட்டீங்க. ஒரு கைக்கு இந்த பேக்கை அப்ளை பண்ணிக்கோங்க. இன்னொரு கைக்கு பேக் போடாதீங்க. பேக் போட்ட கைக்கும், பேக் போடாத தைக்கும் ஒன்றாக சேர்த்து வைத்து வித்தியாசத்தை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். ட்ரை பண்ணிட்டு ரிசல்ட் நீங்களே பாருங்க.

ஒருவேளை உங்களுடைய ஸ்கின்கு பால் தயிர் செட் ஆகாது என்றால் அதற்கு பதிலாக ரோஸ்வாட்டர் அல்லது தண்ணீரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். ஆனால் சன் டேன் ரிமூவ் செய்ய தயிர் நமக்கு நல்ல பலனை உடனடியாக கொடுக்கும். அப்படி இல்லை என்றால் லெமன் ஜூஸை கூட இதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். பச்சரிசியை பேக்குக்காக பயன்படுத்தும் போது உடனடியாக நல்ல ஒரு ரிசல்ட்டை நம்மால் காணமுடியும். புழுங்கல் அரிசி இட்லி அரிசியை பயன்படுத்தினால், ரிசல்ட் தெரிய இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -