தேங்காய் இருந்தா போதும் சட்டுனு 1 நிமிஷத்துல இந்த சட்னி ரெடி பண்ணிடலாம். நல்ல காரசாரமா சுருக்குன்னு இருக்க கூடிய இந்த சட்னி எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாமா!.

- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள செய்யப்படும் சட்னி வகைகள் பல இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் தான் இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் தேங்காயை வைத்து ரொம்ப சுலபமாக, அதே நேரத்தில் நல்ல காரசாரமான ஒரு சட்னியை நிமிஷத்தில் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க இந்த சட்னி எப்படி அரைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1/4 முடி, காய்ந்த மிளகாய் – 8, பூண்டு – பல், புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, உப்பு -1/4 ஸ்பூன், கருவேப்பிலை -1 கொத்து, கடுகு -1/2 டீஸ்பூன், உளுந்து -1 டீஸ்பூன், நல்லெண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய், 6 காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, புளி, உப்பு என இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டை எந்த காரணத்திற்காகவும் தவிர்த்து விடாதீர்கள். பூண்டு தான் இந்த சட்னிக்கு கூடுதல் சுவை கொடுக்கும். இவையெல்லாம் சேர்த்த பிறகு இதை நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளுங்கள்.

அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு போட்டு பொரிந்தவுடன், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதையும் இந்த சட்னியில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இந்த சட்னிக்கு பூண்டு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்த தாளிப்பு முக்கியம். உளுத்தம் பருப்பை சேர்த்து தாளித்து ஊற்றி சட்னி சாப்பிடும் போது அங்கங்கே ஒன்று இரண்டாக இருக்கும் இந்த பருப்பு சட்னிக்கு கூடுதல் சுவையை கொடுக்கும். காரம் அதிகம் வேண்டும் என நினைப்பவர்கள் இன்னும் கூட காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். வேண்டாம் என்றால் குறைத்துக் கொள்ளலாம். அது உங்கள் காரத்திற்கு ஏற்ப சரி செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கிரிஸ்பியான மொறுமொறுன்னு பொட்டுக்கடலை முறுக்கு 10 நிமிடத்தில் வீட்டில் தயாரிப்பது எப்படி? இப்படி செஞ்சா 2 மாசம் ஆனாலும் வச்சி சாப்பிடலாமே!

அவ்வளவு தான் தேங்காய் மட்டும் வைத்து செய்யப்படும் ஒரு சூப்பரான காரச் சட்னி தயார். இந்த சட்னிக்கு இட்லி தோசை என அனைத்துமே மிகவும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் இதை கொஞ்சம் கெட்டியாக அரைத்து துவையல் போல வைத்து சாப்பிடலாம். அது இன்னும் கூட சுவையாக இருக்கும்.இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்க வீட்டில் மறக்காமல் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -