கிரிஸ்பியான மொறுமொறுன்னு பொட்டுக்கடலை முறுக்கு 10 நிமிடத்தில் வீட்டில் தயாரிப்பது எப்படி? இப்படி செஞ்சா 2 மாசம் ஆனாலும் வச்சி சாப்பிடலாமே!

pottu-kadalai-murukku_tamil
- Advertisement -

மொறுமொறுன்னு கிரிஸ்பியான முறுக்கு, அரை கப் பொட்டு கடலையை வைத்து நம் வீட்டிலேயே சூப்பராக தயாரித்து விடலாம். இரண்டு மாதம் ஆனாலும் ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடக் கூடிய இந்த அற்புதமான மொறு மொறு முறுக்கு ரெசிபி விரும்பிய வடிவங்களில் செய்து சாப்பிட எப்படி செய்வது? அப்படின்னு இனி தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை – அரை கப், பச்சரிசி மாவு – 2 கப், மிளகு தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், ஓமம் – கால் ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

செய்முறை

பொட்டுக்கடலை முறுக்கு செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைக் கப் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரைபடவில்லை என்றால் அரைத்ததை ஒரு சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொட்டுக்கடலை மாவை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு கப் அளவிற்கு பச்சரிசி மாவு சேர்க்க வேண்டும். மாவு கடையில் வாங்கியதாக இருந்தாலும் பரவாயில்லை. வீட்டில் அரைத்ததாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூள் மற்றும் கால் ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். உங்களிடம் ஓமம் மற்றும் சீரகம் இருந்தால் அதையும் இதனுடன் சேர்த்து கலந்து விடுங்கள்.

- Advertisement -

பின்னர் இரண்டு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி சேர்த்துக் கலந்து விடுங்கள். மாவு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி உடைத்து கலந்து விட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு மாவை கொண்டு வாருங்கள்.

முறுக்கு பிழிய எந்த பதம் தேவையோ, அந்த பதத்திற்கு மாவை ரொம்பவும் கெட்டியாக இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சரியான அளவிற்கு பிசைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்து வைத்த இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு பிழியும் பாத்திரத்தில் வைத்து பிழிய வேண்டும். அல்லது இதற்கென முறுக்கு பிழிய கவர்கள் விற்கப்படுகிறது. அதிலும் போட்டு நீங்கள் செய்யலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இட்லி மாவு இல்லையா? சட்டுனு சூப்பரான பஞ்சு போல இட்லி தயாரிக்க வீட்டில் ஜவ்வரிசி இருந்தா போதும்! மாவு அரைக்க வேணாம் அரைமணியில் தயார் செய்துவிடலாம்.

முறுக்கு பிழிவதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு ஜல்லி கரண்டியை பின்புறமாக திருப்பிக் கொள்ளுங்கள். அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வட்டமான வடிவங்களில் முறுக்கை பிழிந்து மெதவாக எண்ணெயில் போட்டு எல்லாப் புறங்களும் நன்கு வேகும்படி பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், மொறு மொறுன்னு சூப்பராக இருக்கக்கூடிய இந்த பொட்டுக்கடலை முறுக்கு ஈஸியாக உடனே இப்படி தயார் செஞ்சிடலாம்.

- Advertisement -