1 வாரம் ஆனால் கூட, இந்த கார சட்னி கெட்டுப்போகாது இட்லி தோசைக்கு சூப்பரான இந்த காரச் சட்னி அரைப்பது எப்படி?

red-chutney
- Advertisement -

இட்லி தோசை சப்பாத்தி தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஒரு கார சட்னியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சட்னியை அரைத்து வைத்துவிட்டால் போதும். ஒரு வாரத்திற்கு சைடிஷ் பிரச்சினையே வராது. ஒரு வகையில் நமக்கு உடல் ஆரோக்கியத்தையும் இந்த சட்னி கொடுக்கும். அதே சமயம் நாவிற்கு காரசாரமான ருசியையும் கொடுக்கும். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த பூண்டு கார சட்னி அரைப்பது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

poondu

இந்த சட்னி அரைப்பதற்கு தேவையான பொருட்கள். நல்லெண்ணெய் 50ml, வரமிளகாய் 6 லிருந்து 8, தோல் உரித்த பூண்டு பல் 20 லிருந்து 30, பெரிய நெல்லிக்காய் அளவு புளி, தேவையான அளவு உப்பு.

- Advertisement -

உங்களுக்கு காரம் கொஞ்சம் அதிகம் ஆக வேண்டும் என்றால் 8 வரமிளகாய் வைத்துக் கொள்ளுங்கள். காரம் குறைவாக வேண்டும் என்றால் 6. சிறிய பூண்டு பல்லாக இருந்தால், 30 பல் பூண்டு தேவைப்படும். கொஞ்சம் பெரிய பூண்டு பல்லாக இருந்தால் 20 பல் பூண்டு போதுமானது. தோலுரித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

dry-chilli-milagai

ஒரு கடாயில் 50ml நல்லெண்ணெய் ஊற்றி அது மிதமாக சூடானதும் வரமிளகாய்களை அந்த எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் நிறம் மாறக் கூடாது. 30 செகண்ட்ஸ் அளவு வறுபட்டால் மட்டுமே போதும். எண்ணெயிலிருந்து மிளகாயை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அதே எண்ணெயில் பூண்டை போட்டு, பூண்டின் பச்சை வாடை போகும் வரை கொஞ்சம் சிவக்கும் வரை வறுத்து கொள்ள வேண்டும். 3 லிருந்து 4 நிமிடங்கள் பூண்டினை வறுத்தால் போதுமானது. பூண்டினை எண்ணெயில் இருந்து வடித்து எடுப்பதற்கு முன்பு அதாவது ஒரு நிமிடம் முன்பு புளியையும் அந்த எண்ணெயில் போட்டு இரண்டு வதக்கு வதக்கி எண்ணெயிலிருந்து இருந்து வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

chutney4

இப்போது வறுத்த வர மிளகாய் பூண்டு புளி இந்த பொருட்கள் அனைத்தும் கொஞ்சம் ஆறட்டும். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கடாயில் இருக்கும் மீதமான எண்ணெயை ஊற்றி அரைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் ஊற்றி சட்னியை அரைத்து விடாதீர்கள்.

தண்ணீர் ஊற்றி அரைக்கும் பட்சத்தில் சட்னி சீக்கிரம் கெட்டுப் போய்விடும். எண்ணெய் ஊற்றி அரைத்தால் தான் சட்னி ஒரு வாரத்திற்கு கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முடிந்தவரை கைபடாமல் இந்த சட்னியை வழித்து தண்ணீர் இல்லாத ஒரு பவுலில் மாற்றி பரிமாறிக் கொள்ளுங்கள். சுவையான காரசாரமான இந்த சட்னி ரெசிபி உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -