பெரிய பெரிய பணக்காரர்கள் பணத்தை இந்தத் துணியில் மடித்து தான், பணப் பெட்டியில் வைப்பார்கள்! பல பரிகாரங்கள் செய்தும் பலன் தரவில்லை என்று நினைப்பவர்கள் இதை மட்டும் செய்தால் போதும்.

cash7

எந்த பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை என்று நினைப்பவர்கள் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிகாரத்தை செய்து பாருங்கள். பரிகாரம் என்று நினைத்துக் கூட இதை செய்ய வேண்டாம். பணம் வைக்கும் இடத்தில் ஒரு சிறிய மாறுதலைக் கொண்டு வரப் போகிறீர்கள். அவ்வளவு தான். பரிகாரங்கள் என்பது சிலருக்கு சில நாட்களில் பலனை கொடுக்கும். சிலருக்கு சில வாரங்களில் பலனை கொடுக்கும். சிலருக்கு சில வருடங்கள் ஆனாலும் பலனைக் கொடுக்காது. அது அவரவர் அதிர்ஷ்டத்தை பொருத்தது என்று கூட சொல்லலாம்.

money1

அதிர்ஷ்டம் உள்ளவர்கள், கெட்டது செய்தாலும் அது நன்மையில் போய் முடியும். துரதிஷ்டம் கொண்டவர்கள் நல்லதே செய்தாலும் அது கெட்டதில் போய் முடியும். இது நாம் எல்லோரும் அறிந்தது தானே! மனிதர்களாக பிறந்தவர்களுக்கு இது இயல்பு தான். ஆனால் அதிர்ஷ்டம் உள்ளவர்கள், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் யார் இந்த பரிகாரத்தை செய்தாலும் அதன் மூலம் பலன் நிச்சயம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வீட்டில் நீங்கள் பணத்தை சிவப்புத் துணியில் வைத்து மடித்து பீரோவில் வைக்க வேண்டும். சிவப்புத் துணியில் பணத்தை மடித்து, வீட்டில் சேமித்து வந்தால் அந்தப் பணம் வீண் விரையம் ஆகாது. அந்தப் பணத்தின் மூலம் பல மடங்கு வருமானம் பெருகும். சிவப்பு காட்டன் துணி, பட்டுத்துணி எந்த துணியை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

red-cloth

உடுத்திய துணியை பயன்படுத்தக் கூடாது. உடுத்தாத புது துணியை வாங்கி ஒரு முறை தண்ணீரில் நனைத்து விட்டு, அந்தத் துணிக்கு நான்கு பக்கத்திலும் மஞ்சள் பொட்டு வைத்து அதில் பணத்தை வைத்து சுருட்டி மடித்து விடுங்கள் போதும். பின்பு நடக்கக்கூடிய மாற்றத்தை பாருங்கள். இது ஒரு வழி.

அடுத்தபடியாக நிறைய பேருக்கு ஏலக்காய் வைத்தும் கிராம்பு வைத்தும் பணப்பெட்டியில் பணம் சேரவில்லை என்ற குறை இருந்து வருகின்றது. சிலபேர் கேள்விகளை எழுப்புவது உண்டு. ‘சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு போய் பீரோவில் வைத்து, பீரோவே சமையலறை அலமாரி ஆக மாறிவிட்டது என்று!’ கவலைப்படாதீர்கள், இப்படியாக பணம் சேர்க்க கூடிய வாசனைப் பொருட்களை வைத்தும், பணம் சேராதவர்கள் பின் சொல்லப்படும் பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

sozhi

ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் விருப்பம் போல மூன்று கிராம்பு அல்லது மூன்று ஏலக்காய், பணத்தை ஈர்க்க கூடிய எந்த பொருளை வேண்டுமென்றாலும் ஒரு சிறப்பு சதுர வடிவத்தில் இருக்கும் துணியில் வைத்துக் கொள்ளுங்கள். அதோடு மகாலட்சுமிக்கு சொந்தமான மூன்று சோழிகளையும் வைத்து, சிவப்புத் துணியை சிறு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் நல்ல மாற்றம் தெரியும். முற்ச்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.