இந்த சிவப்பு அரிசியில் ஹார்பேக் போட்டால் தலையில் இருந்து சின்ன முடி கூட உதிர்ந்து கீழே விழாதுன்னா பாத்துக்கோங்க. வயதானாலும் முடி வளர்ந்து கொண்டே போகும்.

hair
- Advertisement -

முடி உதிர்வதை தடுத்து நிறுத்தவும் வயதான பின்பும் நம்முடைய முடி ஸ்ட்ராங்காக வளர்வதற்கும் ஒரு போஷாக்கு நிறைந்த ஹேர் பேக்கை தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாகவே வெள்ளை அரிசியில் இருக்கக்கூடிய சத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை விட பல மடங்கு சத்து அதிகம் நிறைந்த இந்த சிவப்பு அரிசியை தலையில் பேக் போட்டு பாருங்க. உங்களுடைய தலைமுடி கருமையாக அடர்த்தியாக வர தொடங்கும். முடி உதிர்வு உடனடியாக கட்டுக்குள் அடங்கும்.

சிவப்பு அரிசி பெரும்பாலும் மளிகை கடைகளிலேயே நமக்கு கிடைக்கின்றது. அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை முதலில் நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து அரிசியை வேக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு சிவப்பு அரிசியை ஊறவைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வேகவைத்த இந்த அரிசி நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பேஸ்ட் ஆக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அரைத்து வைத்திருக்கும் சிவப்பு அரிசியுடன் வெண்ணெய் – 4 ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 2 இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக அடித்து கலந்து இந்த பேக்கை அப்படியே உங்களுடைய தலையில்  போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து தலையை ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி கொண்டால் போதும் வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டாலுமே உங்களுடைய முடிவுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து விடும். முடி கொட்டுவது நிற்கும். முடி ஷைனிங்காக இருக்கும். பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பு தலையில் தேங்காய் எண்ணெயை வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக சிக்கு எடுத்துவிட்டு அதன் பின்பு பேக்கை அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொதுவாகவே வறட்சியான முடியை கொண்டவர்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தை கொடுக்கக் கூடிய ஹேர் பேக்களை அப்ளை செய்து கொண்டே இருக்க வேண்டும். பொடியாக இருக்கக்கூடிய பொருட்களை அப்படியே தண்ணீரில் கலந்து, ஹேர் பேக்கை அப்படியே தலையில் போடவே கூடாது. அப்படி போட்டால் முடி ட்ரை ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதாவது செம்பருத்தி பூ பொடி, வேப்ப இலை பொடி, நெல்லிக்காய் பொடி, மருதாணி பொடி, கருவாப்பிலை பொடி, இப்படி பொடியாக நாம் எந்த பொருளை தலைக்கு அப்ளை செய்வதாக இருந்தாலும் தலையில் கட்டாயம் எண்ணெய் இருக்க வேண்டும்.

அதே சமயம் இந்த பொடியோடு விளக்கெண்ணெய், பால், தயிர், தேங்காய் பால் போன்ற பொருட்களை சேர்த்து தான் நம்முடைய தலையில் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரியும். வயதானாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்காது.

- Advertisement -