Redmi Note 7 Pro : அறிமுகமானது ரெட்மி நோட் 7 ப்ரோ- 48 மெகா பிக்சல் கேமரா மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதோ

Redmi-note-7-pro
- Advertisement -

இந்திய வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மொபைல் அதிகாரபூர்வமாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த மொபைல் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஐ காட்டிலும் நோட் 7 ப்ரோவில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

Redmi note 7 pro

இந்திய சந்தையில் ரெட்மி நோட் 7 ப்ரோ, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு பதிப்புகளில் உள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி மாடல் 13,999 ரூபாய் ஆகும். அதே போல 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் 16,999 ரூபாய் ஆகும். நெப்டியூன் ப்ளூ, நெபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என மூன்று வண்ணங்களில் இந்த மொபைல் வர உள்ளது. இது வரும் மார்ச் 13 மதியம் 12 மணி முதல் இந்திய சந்தையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ மொபைல் எம்ஐ வலயத்தளம், பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் விற்கப்படும் என்று ஜியோமீ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோமீ ஏர்டெல் நிறுவனத்தோடு கைகோர்த்து 1,120GB 4G டேட்டா, இலவச அழைப்பு மற்றும் இலவச ஏர்டெல் டிவி பிரீமியம் உள்ளிட்ட சேவைகளை ரெட்மி நோட் 7 ப்ரோ மொபைலை வாங்குவோருக்கு அளிக்க உள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பு அம்சங்கள் (Redmi Note 7 specifications):

- Advertisement -

ஆண்ட்ராய்டு: ஓரியோ வெர்ஷன் 9
சிம்: டூயல் சிம் கார்டுகள்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 AIE 11nm – ஆக்டா கோர்
இன்பீல்ட் மெமரி: 128 ஜிபி, 64 ஜிபி
டிஸ்ப்ளே அளவு: 6.3 இன்ச், (16 செ.மீ) ஃபுல் ஹெச்டி
ரேம்: 6 ஜிபி, 4 ஜிபி
பேட்டரி சக்தி: 4,000 mAh
பின்புற கேமரா: 48+5 மெகா பிக்சல் சோனி IMX586 கேமரா சென்சார்

English Overview:
Xiaomi Redmi Note 7 pro mobile details are here.

- Advertisement -