உங்க வீட்டு ஃபிரிட்ஜ் இப்படி இருந்தால் நிச்சயம் ஆபத்துதான். ஃப்ரிட்ஜில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? நீங்களும் தெரிஞ்சு வச்சிக்கோங்க.

fridge

Tip No 1:
முதலில் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். நம் வீட்டு சமையலறையில் கேஸ் சிலிண்டரில் மட்டும் தான் ஆபத்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு. நம் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜிலும் கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் ஒன்று இருக்கும். இது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும் இதன் மூலமும் ஆபத்து இருப்பதை சில பேர் அறிந்திருப்பது இல்லை. நம்முடைய வீடுகளில் ஃபிரிட்ஜ் சாதாரணமாக 3 பாயிண்டில் ஓடும்படி வைத்திருப்போம்.

fridge1

ஆனால் சில சமயங்களில் ஃப்ரிட்ஜை 6 பாயிண்டில் உயர்த்தி வைத்தாலும், ப்ரிட்ஜுக்குள், குளிர் பதம் வரவே வராது. அதாவது ஃபிரிட்ஜ் ஜில்லுனு ஆகாது. உங்களுடைய வீட்டு ஃபிரிட்ஜ் எப்போது ஜில்லுன்னு ஆக மாட்டேங்குதோ, அப்போ உடனே ஃபிரிட்ஜை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விடுங்கள். அதன் பின்பு நல்ல மெக்கானிக்கிடம் ஃப்ரிட்ஜை பழுது பார்த்து விட்டு, மீண்டும் ஃபிரிட்ஜை பயன்படுத்துவதுதான் நல்லது. இல்லையென்றால் நிச்சயம் ஆபத்தை உண்டாக்கிவிடும்.

Tip No 2:
ஃபிரிட்ஜை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், ஃபிரிட்ஜை 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சுவிட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும். இப்போது ஃப்ரிட்ஜை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தி விட்டீர்கள். 20 நிமிடங்கள் கழித்து தான் மீண்டும் ஃப்ரிட்ஜை ஆன் செய்ய வேண்டும். அவசர அவசரமாக ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி அவசர அவசரமாக ஃபிரிட்ஜை ஆன் செய்யக்கூடாது.

fridge3

Tip No 3:
நிறைய பேர் வீடுகளில் ஃப்ரீசருக்கு உள்ளே ஐஸ் கட்டியாக இருக்கும். அதை கவனிக்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். ஃப்ரீசருக்குள் ஐஸ்கட்டி அப்படியே இருந்தால், ஃப்ரிட்ஜ் ஆட்டோமேட்டிக்காக ஆஃப் ஆகாமல், தொடர்ந்து ஓட ஆரம்பிக்கும். இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தால் நமக்கு கரன்ட் பில்லும் அதிகமாகும். அதே சமயம் ஃபிரிட்ஜ் உள்ளே இருக்கும் கம்ப்ரஸர் பழுது அடைவதற்கு அதிகப்படியான வாய்ப்பும் உள்ளது.

- Advertisement -

இந்த ஐஸ் கட்டிகளைக் கரைய விடுவதற்கு ஃபிரிட்ஜில் ஒரு பட்டன் இருக்கும். அந்த பட்டனை நீங்கள் அழுத்தி விட்டு விட்டால் தானாக ஐஸ் கட்டிகள் கரைய தொடங்கிவிடும். ஐஸ் கட்டிகளை உடைக்க கூர்மையான ஆயுதங்களை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

fridge4

Tip No 4:
ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் போது எக்காரணத்தைக் கொண்டும் கெமிக்கல் கலந்த லிக்விடை பயன்படுத்தி சுத்தம் செய்யவே கூடாது. முடிந்தவரை வினிகர் எலுமிச்சை பழ சாரு கொண்டு ஃபிரிட்ஜ் உள்பக்கம் சுத்தம் செய்யலாம். ஃப்ரிட்ஜ் ஸ்விட்சை அணைத்து விட்டு தான் சுத்தம் செய்ய வேண்டும்.

fridge5

ஃப்ரிட்ஜுக்கு பின்பக்கம் இருக்கும் தண்ணீரை அடிக்கடி அப்புறப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜுக்கு பின்பக்கம் தண்ணீர் தேங்கி நிற்கும் ட்ரேவில், கொஞ்சமாக கல் உப்பை போட்டு வையுங்கள். பூச்சி பிடிக்காமல், கொசு வராமல் இருக்கும். ஃப்ரிட்ஜை சுவரோடு ஒட்டி வைக்க கூடாது. சுவருக்கும் ஃபிட்ஜுக்கும் நடுவே கொஞ்சம் கேப் இருக்க வேண்டும்.

fridge6

Tip No 5:
சில ஃபிரிட்ஜுக்கு இப்போதும் ஸ்டெபிலைசர் அவசியமில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்றால், ஒரு ஸ்டெபிலைசரை வாங்கி வைப்பது மிகவும் நல்லது. நம் வீட்டில் வைத்திருக்கும் எந்த பொருளாக இருந்தாலும், அதில் இருக்கும் நல்லதை தெரிந்து வைத்துக் கொள்வதை விட அதில் வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ரோஜா செடி மற்றும் மற்ற பூச்செடிகளில் புதிய தளிர் சரியாக வரவில்லையா? இந்த 2 பொருட்கள் இருந்தால் மொட்டுக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.