பாத வெடிப்பு குணமாக அருமையான வீட்டு வைத்தியம்

foot crack rice flour
- Advertisement -

பொதுவாக அனைவரும் தங்களுடைய உடலில் மற்ற பாகங்களை அழகுப்படுத்திக் கொள்ளவும் கவனிக்கவும் எடுத்துக் கொள்ளும் அக்கறையை பாதத்தில் காட்டுவதில்லை. அது பார்த்தவுடன் மற்றவர் கண்ணில் படாது என்பதால் கூட இப்படி தவிர்க்கலாம். ஆனால் ஒரு மனிதனுடைய ஆணிவேர் என்றால் அது பாதங்கள் தான்.

முழு உடலையும் தாங்கக்கூடிய அந்தப் பாதங்களை அழகுடனும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை. சிலர் தங்களுடைய பாதங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு அது வெடித்து புண்ணாகி இருக்கும். அந்த சூழ்நிலைக்கு போகும் வரையில் அந்த பாதங்களை பற்றி கவலைப்படவே மாட்டார்கள.

- Advertisement -

நாளடைவில் அது வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் ஆகும் சமயத்தில் தான் அதற்கான சிகிச்சை எடுப்பார்கள். அப்படி இல்லாமல் பாத வெடிப்பு வந்த உடனே அதை சரி செய்ய வேண்டும். முடிந்த அளவில் இவையெல்லாம் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் பாத வெடிப்பு குணமாக அருமையான ஒரு விட்டு வைத்திய முறையை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

பாத வெடிப்பு குணமாக

இந்த முறை எத்தனை அதிகமான பாத வெடிப்பு ஏற்பட்டவர்களும் பயன்படுத்தலாம் நிச்சயம் நல்ல பலனை தரும். இதற்கு தேவையான பொருட்களை பார்த்துக் கொள்வோம். முதலில் சிறிதளவு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, 10 வேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து கொஞ்சம் தண்ணீரை தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பச்சரிசி மாவு மஞ்சள் இரண்டையும் சேர்த்து கலந்து விடுங்கள். லேசாக கெட்டிப்பட்டு வரும் போது அரைத்த வேப்ப இலையை பேஸ்ட் இதில் சேர்த்து உடன் ஒருமுறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தில் இதை ஊற்றிக் கொள்ளுங்கள். அதற்கு பிறகு உங்கள் பாதங்களை ஒரு முறை நன்றாக தண்ணீர் ஊற்றி அழுக்கில்லாமல் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதற்குள்ளாக இந்த பச்சரிசி மாவு கரைசல் உங்கள் பாதம் சூடு பொறுக்கும் வரை ஆற விடுங்கள். அதன் பிறகு உங்கள் பாதத்தை இந்த கரைசல் பத்து நிமிடம் வரை வைத்திருங்கள்..

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து பாதங்களை எடுத்து நல்ல சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடுங்கள். அதன் பிறகு பாதம் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து விட்டு அதன் மேல் மெல்லிய துணி ஒன்றை சுற்றி விடுங்கள். இந்தத் தேங்காய் எண்ணெய் இரவு முழுவதும் உங்கள் பாதத்தில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் துணி சுற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தேவையற்ற முடிகளை நீங்க உதவும் மூலிகை

இந்த முறையை தொடர்ந்து பின்பற்றும் பொழுது வெடித்து புண்ணாண கால்கள் கூட பிஞ்சுக் குழந்தையின் பாதம் போல் அழகாக மாறிவிடும். ஒரு வேளை வெடிப்பெல்லாம் இல்லை என்பவர்கள் வாரம் ஒரு முறை இப்படி பராமரித்தால் போதும் பாதங்கள் அழகாக இருக்கும். இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -