தேவையற்ற முடிகளை நீங்க உதவும் மூலிகை

unwanted hair
- Advertisement -

பெண்களுக்கு ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளில் ஒன்றுதான் தேவையற்ற இடங்களில் வளரக்கூடிய முடிகள். உதாரணமாக சில பெண்களுக்கு ஆண்களைப் போல உதட்டிற்கு மேலே மீசை வளர்ந்து இருக்கும். இதே போல் சில பெண்களுக்கு ஆங்காங்கே ஒவ்வொரு முடிகள் தாடியாக வளர்ந்திருக்கும். இதே போல் கைகளிலும் கால்களிலும் அதிகப்படியான முடிகள் வளர்ந்து இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் அதை நீக்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்வார்கள். சேவிங் செய்வது, வேக்சிங் செய்வது. க்ரீம் தடவி முடியை நீக்குவது என்று பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

இவை அனைத்தும் நிரந்தரமான தீர்வா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு முறை உபயோகப்படுத்தி விட்டால் திரும்பத் திரும்ப மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ ஒரு சிலருக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கூட பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும். இந்த சூழ்நிலையை தவிர்க்கவும் இயற்கையான முறையில் நம்முடைய முடிகளை நீக்கவும் எந்த இலையை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்தில் மஞ்சள் உரசி குளிப்பது உண்டு. பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சளை உரசி தேய்த்து குளிப்பாட்டுவதன் மூலம் அவர்களின் உடலில் இருக்கக்கூடிய முடிகள் நீங்கிவிடும் என்ற கருத்து நிகழ்வி வந்தது. அந்த பழக்கம் குறைய குறைய இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறு வயதிலிருந்து மஞ்சளை தேய்த்து குளித்துக் கொண்டு வருபவர்கள் உடம்பில் இருக்கக்கூடிய பூனை முடிகள் என்று சொல்லக்கூடிய முடிகள் படிப்படியாக உதிர ஆரம்பிக்கும். மேலும் புதிதாக முடிகள் எதுவும் வளராது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

சரி இப்பொழுது இந்த மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கம் யாரிடமும் இல்லை. மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அந்த சூழ்நிலையில் நமக்கு மூலிகைகள் தான் கை கொடுக்கும். தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு உதவக்கூடிய மூலிகையாக குப்பைமேனி கீரை திகழ்கிறது. இது பொதுவாக சாலை ஓரங்களில் பரவலாக கிடைக்கக்கூடிய ஒரு வகையான மூலிகை. குப்பையாக இருக்கும் மேனியை கூட அதாவது குப்பையாக இருக்கும் உடலை கூட நன்றாக மாற்றி விடும் அளவிற்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை என்பதால் தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயரை வந்தது.

- Advertisement -

இந்த குப்பைமேனியை நாம் நம்முடைய பருக்களிலோ அல்லது புண்களிலோ போடும் பொழுது அவை விரைவிலேயே சரியாகிவிடும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் முகத்திலும், கைகளிலும், கால்களிலும் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்குவதற்கும் இந்த குப்பைமேனி இலை பயன்படுகிறது.

ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை எடுத்து எந்த இடத்தில் நீங்கள் முடியை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

அரை மணி நேரம் கழித்து கைகளை வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு எலுமிச்சம் பழ தோலை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நன்றாக மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். அதிகமான முடி இருக்கும் நபர்கள் இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் கண்டிப்பான முறையில் அவர்களின் முடி இயற்கையிலேயே உதிர ஆரம்பித்து விடும். முகத்தில் இந்த பேக்கை போடுவதாக இருந்தால் புருவங்களில் படாத அளவிற்கு போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தலையில் வழுக்கை ஏற்படாமல் தடுக்க ஹேர் பேக்

இயற்கையில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதால் இந்த மூலிகையை பயன்படுத்தி தேவையற்ற முடிகளை நீக்கலாம்.

- Advertisement -