வீட்டில் ஈக்கள் தொந்தரவு அதிகமாக இருந்தால் வாரம் ஒரு முறை இப்படி செய்யுங்கள்! ஒரு ஈ கூட உங்க வீட்டு பக்கம் வராது!

house-flies1

பழ சீசன் வேளையில் பெரும்பாலும் வீடுகளில் ஈக்கள் தொந்தரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக மாம்பழ சீசன்களில் ஈக்களை கட்டுப்படுத்துவது என்பது நமக்கு சிரமமான காரியம் தான். இந்த ஈக்களை கட்டுப்படுத்த வாரம் ஒரு முறை நம் வீட்டை இந்தத் தண்ணீரால் துடைத்தால் போதும்! வேறு எதுவுமே செய்ய தேவை இல்லை. சமையலறை மற்றும் வீடு முழுவதும் இந்த தண்ணீரை கொண்டு துடைத்து எடுத்தால் போதும், ஒரு ஈ கூட வீட்டிற்குள் நுழையவே செய்யாது. அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

house-fly3

கண்ட இடங்களில் உட்காரும் ஈ ஆனது சமையல் பொருட்களிலும் உட்காரும் பொழுது அதிலிருந்து நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே வீட்டை ஈக்கள் தொந்தரவு இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். ஈக்களுக்கு புதினா இலை, துளசி இலைகளின் வாசம் சுத்தமாக பிடிக்காது என்று கூறப்படுகிறது. எனவே இவற்றின் இலைகளை வீட்டில் நீங்கள் வைத்திருந்தால் ஆங்காங்கே மூளைகளில் கசக்கி போட்டு விடலாம். குறிப்பாக சமையலறை மேடைகளில் போட்டு வைத்தால் நல்லது.

கிருமிகளுக்கு எதிராக செயல்படும் டெட்டால் ஈக்களுக்கு எதிராகவும் செயல்படும். நீங்கள் வாரம் ஒருமுறை கட்டாயம் அரை பக்கெட் தண்ணீரில் இரண்டு மூடி டெட்டால் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கல் உப்பு சேர்த்த தண்ணீரைக் கொண்டு வீட்டை துடைத்தால் ஒரு ஈ கூட அந்த பக்கம் வரவே செய்யாது. கல் உப்பு கரைந்ததும் இந்த தண்ணீரை வைத்து வீடு முழுவதும் துடைத்து வரலாம்.

mint

நாலைந்து துளசி இலைகள், நாலைந்து புதினா இலைகள், இரண்டு பட்டை இவற்றை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற விடுங்கள். மறுநாள் காலையில் அரை பக்கெட் தண்ணீரில் இவற்றை வாடிக்கட்டி விட்டு ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீருடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வினிகர் இருந்தாலும் 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். டெட்டால் வாசனை பிடிக்காதவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

- Advertisement -

ஒரு சிலருக்கு டெட்டால் போட்டு துடைத்தால் அந்த வாசனை பிடிக்காமல் போகலாம் அல்லது மருத்துவமனையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். வாசனை மிக்க பினாயில் ஊற்றி வீட்டை துடைத்தாலும் சிலருக்கு இதே நிலைதான். எனவே எந்த வாசனையும் இல்லாமல் ஈக்களை எளிதாக துரத்த மேற்கூறிய இந்த வழிமுறையை பின்பற்றி வீட்டை துடைத்து வந்தால் ஈக்கள், எறும்புகள், பூச்சிகள் போன்ற எந்த ஒரு தொந்தரவும் ஏற்படாது. சமையலறையில் இருக்கும் மேடை மற்றும் அதன் பின்னால் இருக்கும் டைல்ஸ் ஆகியவற்றையும் இந்த தண்ணீரை கொண்டு துடைத்தால் ஈக்களின் தொந்தரவு முற்றிலும் ஒழியும்.

water-bottle-house-fly

வாட்டர் பாட்டிலின் நடுவில் ஓட்டை போட்டு அதற்குள் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீருக்கும் அந்த ஓட்டைக்கும் இடையில் 2 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும். பாட்டிலுக்குள் கொஞ்சம் கருவாடு துண்டுகளை போட்டு பாட்டிலை டைட்டாக மூடி வைத்து விடுங்கள். கொத்துக் கொத்தாக ஈக்கள் இருக்கும் இடங்களில் இது போல் செய்து வைத்தால் அரை மணி நேரத்தில் மொத்த ஈக்களும் இந்த பாட்டிலிற்குள் ஓட்டை வழியாக நுழைந்து விழுந்து இறந்து விடும்.

house-flies

மேற்கூறிய இந்த வழிமுறைகளை பின்பற்றி ஈக்கள் தொந்தரவில் இருந்து எளிமையாக விடுபடலாம். கூடுமானவரை காய்கறி, பழங்களை சூடாக இருக்கும் தண்ணீரை ஊற்றி கழுவி பின்னர் பயன்படுத்துங்கள். இவற்றை பாதி பயன்படுத்திவிட்டு மீதியை எப்பொழுதும் திறந்து வைத்து இருக்காதீர்கள். சரியான முறையில் பதப்படுத்தி பத்திரமாக மூடி போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் ஈக்களின் தொந்தரவை குறைக்கலாம்.