உங்கள் டாய்லெட்டில் இருக்கும் விடாப்பிடியான மஞ்சள் கரையை போக்குவதற்கு கஷ்டமே படாமல் என்ன செய்யலாம்? கிளீனர், ஆசிட் எதுவுமே தேவையில்லை, 5 ரூபாய் சோப்பு போதும்!

toilet-soap-bar
- Advertisement -

வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதே போல நாம் பயன்படுத்தும் டாய்லெட்டையும் எப்பொழுதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். நோய்க்கிருமிகளை பரவ செய்யக்கூடிய டாய்லெட்டை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் நம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. சிலருடைய வீட்டில் உப்பு தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ரொம்ப சுலபமாக உப்பு கறைகள் படிந்து, அதன் மீது அழுக்குகளும் சேர்ந்து மஞ்சளாக டாய்லெட் முழுவதும் அசிங்கமாக தோற்றமளிக்கும்.

அடிக்கடி சுத்தம் செய்ய முடியாவிட்டாலும், வாரம் ஒரு முறை இப்படி செய்தால் உங்களுடைய டாய்லெட் உப்பு கறை படியாமல் மஞ்சள் நிறத்தில் மாறாமல், எப்போதும் பளிச்சென்று வெள்ளை வெளேரென்று ஜொலிக்கும்! டாய்லெட் கிளீனர்கள், ஆசிட் போன்ற எந்த நெடி எடுக்கும் கெமிக்கல் வகைகளையும் பயன்படுத்தாமல் ஐந்து ரூபாய் சோப்பு மற்றும் ஒரு சில பொருட்களை சேர்த்து இப்படி செஞ்சா, கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாமல் விடாப்பிடியான எத்தகைய மஞ்சள் கரையையும் டாய்லெட்டில் இருந்து சுலபமாக நீக்கிவிடலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

- Advertisement -

டாய்லெட்டில் இருக்கும் உப்பு கறைகள் மற்றும் மஞ்சள் நிற விடாப்பிடியான கறைகளை எளிதாக அகற்றுவதற்கு முதலில் ஒரு பிளாஸ்டிக் மக் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து ரூபாய் துணி துவைக்கும் சோப் ஏதாவது ஒரு பிராண்டில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் சோப் வெள்ளை நிறத்தில் இல்லாமல் நீல வண்ணத்தில் இருக்குமாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் கேரட் துருவல் பயன்படுத்தும் பெரிய கண்களில் நன்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் சோப்பு சீக்கிரமாக கரையும். இல்லை என்றால் இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் பயன்படுத்துங்கள். சோப்பு முழுவதும் தண்ணீரில் கரைந்து போய் இருக்கும். இந்த ஐந்து ரூபாய் சோப்பு தண்ணீருடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பேக்கிங் சோடா எனப்படுவது வீட்டில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண சமையல் சோடா தான், வேறு எதுவும் இல்லை. பின்னர் அதனுடன் 100ml அளவிற்கு வினிகர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இவற்றை சேர்க்கும் பொழுது நுரை போல பொங்கி வர ஆரம்பிக்கும். இதனுடன் அரை டம்ளர் அளவு சூடான சுடு தண்ணீரை ஊற்றுங்கள். பின்னர் எல்லாவற்றையும் கலந்து ஒரு மக் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை அப்படியே உங்களுடைய டாய்லெட் முழுவதும் எல்லா இடங்களிலும் படும்படி ஊற்றி விடுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே காய விட்டு விடுங்கள். அவ்வளவுதான் கொஞ்ச நேரத்தில் எல்லா கிருமிகள் மற்றும் அழுக்குகள் போன்றவற்றையும் இந்த கலவை நீக்கிவிடும். ஒரு மணி நேரம் கழித்து டாய்லட் பிரஷ் வைத்து லேசாக தேய்து விட்டால் போதும், உங்களுடைய அழுக்கு படிந்த டாய்லெட், புத்தம் புதியதாக பளபளன்னு வெள்ளை வெளேரென்று மின்ன ஆரம்பிக்கும். இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு நாம் இதை இவ்வளவு நாள் சுத்தம் செய்தோம்? என்று நீங்களே நொந்து கொள்வீர்கள், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -