- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உங்க வீட்டில் வெறும் வெங்காயம் தான் இருக்கா, கவலைய விடுங்க இட்லி, தோசை, சப்பாத்தி ஏன்...

உங்க வீட்டில் வெறும் வெங்காயம் தான் இருக்கா, கவலைய விடுங்க இட்லி, தோசை, சப்பாத்தி ஏன் சாதத்துக்கு கூட ஒரு பக்கா சைடு டிஷ் இரண்டுடே நிமிசத்தில் ரெடி பண்ணிடலாம் வாங்க.

- Advertisement -

இட்லி தோசைக்கு பெரும்பாலும் நாம் சைடிஷ் ஆக இந்த சட்னி வகைகளை தான் தேர்வு செய்வோம். அதிலும் எத்தனை வகை சட்டினி ரெசிபிகள் இருந்தாலும், பெரும்பாலும் நாம் செய்யக்கூடியது இரண்டு, மூன்று வகைகள் தான். இதையே திரும்பத் திரும்ப செய்யும் போது வீட்டில் உள்ளவர்களுக்கும் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்து தந்தால் நன்றாகத் தான் இருக்கும் என தோன்றுவது இயல்பு தானே. ஆனால் அதற்கு நேரம் இருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற பொருட்கள் வீட்டில் இருக்க வேண்டும். இப்படி யோசிக்கும் போது நாம் எப்போதும் போல் நமக்குத் தெரிந்த தேங்காய் சட்னி, வேர்க்கடலை தக்காளி என்று வழக்கமாக செய்யும் சட்னி வகைகளை செய்து விடுவோம்.இந்த சைடிஷ் செய்ய வீட்டில் வெங்காயம் இருந்தால் போதும் அதை வைத்து சூப்பரா இந்த தொக்கு செஞ்சிடலாம்.

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 4 மீடியம் சைஸ், பல் பூண்டு – 4, புளி – ஒரு சிறிய கொட்டை பாக்கு அளவு , கருவேப்பிலை – 2 கொத்து, மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், வெல்லம் – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை கொஞ்சம் பெரிதாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான்கு பல் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அதையும் பச்சை வாசனை போகும் வரை லேசாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு அதில் மிளகாய் தூளை சேர்த்தவுடன் அடுப்பை லோ ஃபிளேமில் மாற்றி மிளகாய் தூளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். இப்போது புளியையும் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே கொஞ்சம் ஆற விடுங்கள்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஆறிய இந்த வெங்காயம் மிளகாய் தூள் சேர்த்து ஒரு ஸ்பூன் வெல்லத்தையும் சேர்த்து மீதம் இருக்கும் நல்லெண்ணையை இதில் ஊற்றி சற்று குறைவாக அரைத்துக் கொள்ளுங்கள் ஈஸியான வெங்காயத் தொக்கு ரெடி. இனிப்பு, புளிப்பு, காரம் என அனைத்தும் கலந்து இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தக்காளி போட்டு புதினா சட்னி இப்படி ஒருமுறை செஞ்சி பாருங்க 10 இட்லி கூடுதலா சாப்பிடுவீங்க! ருசியான தக்காளி புதினா சட்னி செய்முறை விளக்கம் இதோ.

இந்த வெங்காய தொக்கு இட்லி,தோசைக்கு மட்டும் அல்ல, சாதத்துடன் கூட இதை சேர்த்து சாப்பிடலாம். அத்தனை சுவையாக இருக்கும். அதுவும் அதிக செலவு இல்லாம, கொஞ்ச நேரத்தில் இதை செய்து விடலாம் என்றால் உடனே செய்து விட வேண்டியது தானே.

சற்று முன்