தக்காளி போட்டு புதினா சட்னி இப்படி ஒருமுறை செஞ்சி பாருங்க 10 இட்லி கூடுதலா சாப்பிடுவீங்க! ருசியான தக்காளி புதினா சட்னி செய்முறை விளக்கம் இதோ.

- Advertisement -

புதினா சட்னி என்றாலே அதன் சுவை நமக்கு சாப்பிட ஆர்வத்தை தூண்டி விடும். அந்த அளவிற்கு எல்லோருடைய ஃபேவரட் ஆக இருக்கக் கூடிய இந்த புதினா சட்னி தக்காளி போட்டு இந்த மாதிரி செஞ்சு சாப்பிடும் பொழுது இன்னும் ருசியாகிறது. அருமையான தக்காளி புதினா சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

தக்காளி புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – ரெண்டு கைப்பிடி, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – இரண்டு கொத்து, பெரிய தக்காளி – ஒன்று, வரமிளகாய் – 4, உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன்.

- Advertisement -

தக்காளி புதினா சட்னி செய்முறை விளக்கம்:
தக்காளி புதினா சட்னி செய்வதற்கு முதலில் 2 கைப்பிடி அளவிற்கு புதினா எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீரை வடிகட்டி உதறி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல கொத்தமல்லி தழையையும் நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். லேசாக வறுபடும் பொழுது வர மிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப காம்புகள் நீக்கி சேர்க்க வேண்டும். பின்னர் லேசாக வறுத்த பின்பு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதை நாரெல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு மசிய வதக்கி விடுங்கள். தக்காளி முக்கால் பாகம் மசிய வதங்கி வரும் பொழுது, நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தீபாவளி நோன்பில் முக்கியமாக செய்யப்படும் இந்த சுகியத்தை ஒட்டாமல், உடையாமல் அழகாக அதே நேரத்தில் நல்ல ருசியாகவும் செய்ய டிப்ஸுடன் கூடிய செய்முறை.

இதனுடன் 2 கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கி விடுங்கள். இலைகள் எல்லாம் சுருண்டு வரும் பொழுது கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஆற வைத்துள்ள பொருட்களை சேர்த்து ஒரு முறை நன்கு சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறு தாளிப்பு இதற்கு கொடுக்க வேண்டும். இதற்காக அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வரும் பொழுது உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதை சட்னியுடன் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டால் அவ்வளவு சுவையான தக்காளி புதினா சட்னி ரெசிபி ரெடி! இதை இட்லி, தோசை மாலையில் சுடும் பஜ்ஜி, பணியாரம் போன்றவற்றுக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -