வாடகை வீட்டில் இருப்பவர்கள், செய்யும், பூஜை புனஸ்காரங்களின் பலன் யாரைப் போய் சேரும்!

home-homam

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே சொந்த வீட்டில் வாழும் பாக்கியம் கிடைத்து விடாது. நம்மில் பலபேர் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள். சிலபேருக்கு வாழ்க்கையில், சொந்த வீடு கட்டிக்கொண்டு போகும் யோகம் வந்துவிடும். சில பேருக்கு கடைசி வரை வாடகை வீடு தான் என்ற சூழ்நிலை இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பலபேருக்கு, இந்த சந்தேகம் இருக்கிறது. வாடகை வீட்டில் நாம் செய்யும் பூஜையாக இருந்தாலும், ஹோமங்களாக இருந்தாலும், அதன் பலன் யாரை சேரும்? வீட்டுக்குச் சொந்தக்காரர் ஆன, அதாவது வீட்டு ஓனரை போய் சேருமா? அல்லது வீட்டில் குடியிருக்கும் உங்களுக்கு சேருமா? இந்த சந்தேகம் பல பேருக்கு உண்டு.

home

இப்படிப்பட்ட சந்தேகங்களை எழுப்புவதற்காகவே சிலர் இருக்கிறார்கள்! ‘வாடகை வீட்டில் இருக்கும் நீ, எதற்காக ஹோமங்களை எல்லாம் செய்கிறாய்? இதற்கான பலன் வாடகைக்கு குடியிருக்கும், உனக்காக வரப்போகிறது! இந்த வீட்டின் உரிமையாளரை தான் போய் சேரும்.’ என்று சொல்லி உங்கள் மனதை குழப்பி விடுவார்கள். அதாவது சில பேர் வாடகை வீட்டில் இருந்தாலும் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், குபேர ஹோமம், போன்ற ஹோமங்களை செய்வார்கள். இந்த ஹோமங்களில் கிடைக்ககூடிய பலன் யாரைப் போய் சேரும் என்ற, இந்த சந்தேகம் உங்களில் யாருக்காவது உள்ளதா? இந்த பதிவின் மூலம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

மனிதர்கள் தான், ஏழை பணக்காரன் என்ற பாரபட்சத்தை பார்த்து பழகுவான். கடவுளுக்கு ஏழை, பணக்காரன், சொந்த வீடு வைத்திருப்பவர், வாடகை வீட்டில் குடி இருப்பவர், என்றெல்லாம் தெரியாது. உண்மையான பக்தி மட்டுமே அவர் கண்ணுக்கு தெரியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாடகை வீட்டிலிருந்து கடவுளை அழைத்தாலும் சரி, வீடு இல்லாமல் காட்டில் தங்கி கடவுளே அழைத்தாலும் சரி, உண்மையான பக்திக்கு செவிசாய்ப்பவர்தான் அந்த இறைவன். ஆகவே, பூஜை புனஸ்காரங்களை மனதார எவரொருவர், மனத்தூய்மையோடு செய்கிறாரோ, அதற்க்காண பலனை அவர் கட்டாயம் பெறுவார். நீங்கள் வாடகை வீட்டில் தங்கி செய்யும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், அதற்கான புண்ணியம் நிச்சயம் உங்களை வந்து அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வாடகை வீட்டில் குடியிருந்து இந்த பூஜைகளை செய்கிறோமே! அதற்கான பலனை நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற சந்தேகத்தோடு மட்டும் தயவு செய்து அந்த பூஜைகளை செய்யாதீர்கள். சந்தேகம் என்பது பூஜையில் வந்துவிட்டால், அந்த பூஜை கட்டாயமாக முழுமை அடையாது.

naivedyam

- Advertisement -

சிலபேருக்கு மற்றொரு சந்தேகமும் உண்டு. நம்மில் பல பேர் இதை அனுபவப் பூர்வமாகவே பார்த்திருப்போம். அதாவது நம்முடைய வீட்டில் நெய்வேத்தியம் செய்து சுவாமிக்கு இலைபோட்டு பிரசாதத்தை படித்திருப்போம். அந்த இலையில் இருந்து எடுக்கப்பட்ட பிரசாதத்தை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் உண்ண வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். அக்கம்பக்கத்தினர் கொடுப்பதாக இருந்தால் அந்த இலையில் வைத்த பிரசாதத்தை கொடுக்கமாட்டார்கள். அதாவது இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதம் உங்களுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அந்த பிரசாதத்தை நீங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் கொடுக்கலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அடுத்ததாக, சிலபேருக்கு வீட்டில் நோன்பு நூற்கும் பழக்கம் இருக்கும். அதாவது தீபாவளி நோன்பு கார்த்திகை தீப நோன்பு, இப்படிப்பட்ட நோன்பு முறையினை கடைப்பிடிப்பவர்கள். அந்த நோன்பு தட்டில் நோன்பு கயிறு, குங்குமம், பிரசாதம் போன்றவற்றை வைத்து கோவிலுக்கு கொண்டு போய் அவர்களுடைய கோத்திர பெயரைச் சொல்லி, அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். அந்த குறிப்பிட்ட தட்டில் இருக்கும், அந்த பிரசாதத்தை வெளியாட்களுக்கு பகிர்ந்து கொடுக்க மாட்டார்கள். சில வீடுகளில் இந்த பழக்கம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த நோன்பு பலகாரம், கயிறு இவைகளை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பார்கள். இது அவரவர் வீட்டு பாரம்பரியம். இந்தப் பாரம்பரிய பழக்கத்தை கடைபிடிப்பது தவறில்லை என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த பழக்க வழக்கம் எல்லாம் இந்த காலகட்டத்திலும் கடைப்பிடிக்கிறார்களா, என்பது தெரியவில்லை. ஆனால் சில சாஸ்திர விதிமுறைகளை மீறாமல் இருப்பது நல்லது.

Diwali viratham

‘சில பேர் எங்கள் வீட்டு பூஜை அறையில், இலையில் வைத்த பிரசாதத்தைக் கூட, வெளி ஆட்களுக்கு தருவது வழக்கம் இல்லை.’ இதுதான் எங்களுடைய பாரம்பரியம் என்று சொன்னாலும் பரவாயில்லை. அவரவர் வீட்டு பழக்கத்தை அவரவர் மாற்றிக் கொள்ளாமல் இருப்பது இன்னும் சிறப்பு. அது நம்முடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களை பலப்படுத்தும்.

எது எப்படியாக இருந்தாலும் சரி. இறைவன் என்பவன் எல்லோருக்கும் சமமானவன். அவன் யாருக்காகவும், எதற்காகவும் பாரபட்சம் பார்த்து அருளை வழங்க மாட்டான் என்பது மட்டும் உண்மையான ஒன்று. இந்த உலகத்தில் உள்ள பொருட்களில் இது எனக்கு சொந்தம். அது எனக்கு சொந்தம் என்று நம்மால் சொந்தம் கொண்டாட முடியுமே தவிர, இறைவன் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமானவன் அந்த இறைவன். உண்மையான மனதோடு தன்னலம் கருதாமல் எவரொருவர் இறைவனின் பாதங்களை சரணடைகிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கும், என்ற கருத்தினை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இன்று தேய்பிறை அஷ்டமி! தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் அஷ்டமி வழிபாட்டை, வீட்டிலிருந்தே எப்படி நிறைவு செய்வது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have oojai palangal in Tamil. Poojai palangal. Vaadagai veedu. Homam palangal Tamil. Homam pooja benefits Tamil.