ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி 65 வீட்டிலும் அதே சுவையில் செய்ய இந்த எளிய டிப்ஸ் தெரிந்து கொண்டால் போதும்

- Advertisement -

விருப்பமில்லாத காய்கறிகளையும் கூட ஹோட்டல் சுவையில் சமைத்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகளும் பெரியவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு காலிஃபிளவர் வைத்து கோபி 65, கோபி மஞ்சுரியன், கோபி பிரைட் ரைஸ், கோபி செட்டி நாடு கிரேவி என பலவிதமான ஸ்பெஷல் டிஷ்களை ஹோட்டல்களில் செய்கின்றனர். காலிஃப்ளவர் பிடிக்காதவர்கள் கூட இவ்வாறு விதவிதமான சுவையில் இருக்கும் உணவுகளை கண்டால் விருப்பமாக சாப்பிடுவார்கள். எனவே ஓட்டலில் கிடைக்கும் அதே சுவையில் கோபி 65 வை வீட்டிலும் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vegetable1

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 1, சோள மாவு – ஒரு கப், மைதா மாவு – அரை கப், தனி மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், எலுமிச்சை பழம் ஒன்று உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்த பின் இந்த தண்ணீரில் காலிஃபிளவரை சேர்த்து இரண்டு நிமிடம் வேகவைத்து எடுக்கவேண்டும். காலிஃபிளவர் முழுவதுமாக வெந்துவிடாமல் பாதி அளவு வெந்திருக்கும் பொழுதே வெளியில் எடுத்து விட வேண்டும். பின்னர் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் சாறை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

coliflower

அதன்பின் ஒரு கிண்ணத்தில் வேக வைத்த காலிஃப்ளவரை சேர்த்து அதனுடன் ஒரு கப் சோள மாவு, அரை கப் மைதா மாவு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து கைகளால் நன்றாக கலந்துவிட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இறுதியாக பிழிந்து எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறை இதனுடன் சேர்த்து ஒருமுறை அனைத்தையும் நன்றாக பிரட்டி விட வேண்டும். எப்பொழுதும் எலுமிச்சை சாறை அசைவ உணவுகளுக்கு தான் அதிகம் பயன்படுத்துவோம். ஆனால் கோபி 65 வை சமைப்பதற்கும் இந்த எலுமிச்சை பழச்சாறை சேர்த்துப் பாருங்கள். ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் அதே சுவையில் நமக்கு வீட்டிலேயே கிடைத்திடும்.

lemon1

இவை அனைத்தையும் நன்றாக கலந்த பின்னரும் நாம் சேர்த்த மாவு காலிஃபிளவருடன் ஒட்டாமல் இருந்தால் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மசாலாக்கள் அனைத்தையும் காலிஃப்ளவருடன் நன்றாக ஒட்டிக்கொள்ளுமாறு கலந்த பின்னர் பத்து நிமிடம் அப்படியே ஊற விட வேண்டும்.

gopi 65 2

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மசாலாவுடன் பிரட்டி வைத்துள்ள காலிஃப்ளவரை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவேண்டும். இறுதியாக சிறிது கருவேப்பிலை இலைகளை எண்ணெயில் பொரித்து காலிஃப்ளவர் மீது சேர்த்து விட வேண்டும். அவ்வளவுதான் ஹோட்டலில் கிடைக்கும் அதே சுவையில் காலிஃப்ளவர் 65 தயாராகிவிட்டது. இதனை அப்படியே சுடச்சுட சாப்பிட்டால் வாயில் மொறுமொறுவென சுவைப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -