சாதத்தை குக்கரில் இப்படி வைத்தால், வெரைட்டி ரைஸ் செய்ய சாதம் ஒருபோதும் குழைந்து போக வாய்ப்பே இல்லை. இந்த டிப்ஸ மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்க!

rice1

லஞ்ச் பாக்ஸ் பேக் செய்ய புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், இப்படிப்பட்ட வெரைட்டி ரைஸை செய்வதற்கு வெள்ளை சாதத்தை பக்குவமாக வைக்க வேண்டும். சில பேர் பாசுமதி அரிசியில் வீட்டிலேயே ஃப்ரைட் ரைஸ் செய்வார்கள். ஆனால் அரிசியை பக்குவமாக வடிக்க தெரியாது. அரிசியின் பக்குவம் தான் மிக மிக முக்கியம். அரிசி வேகவில்லை என்றாலும் நாம் செய்யும் கலவை சாதம் நன்றாக இருக்காது. குழைந்து போனாலும் கலவை சாதம் நன்றாக இருக்காது. இந்த வெள்ளை சாதத்தை பக்குவமாக வடிக்க, சில டிப்ஸ் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

முதலில் நீங்கள் எந்த அரிசியை வேக வைப்பதாக இருந்தாலும், அந்த அரிசியை முதலில் மூன்று முறை கழுவி விடவேண்டும். அதன் பின்புதான் நல்ல தண்ணீரை ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் ஊற வைக்கக் கூடாது. ஐஸ் வாட்டரில் ஊற வைக்க போகிறீர்கள். ஐஸ்வாட்டர் உங்களிடம் இல்லையென்றால், ஐஸ் க்யூப் நான்கை எடுத்து அந்த தண்ணீரில் போட்டு, ஐஸ் கீயூபோடு தண்ணீரை அரிசியில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். ஐஸ் வாட்டரில் ஊற வைத்த அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வேகும். (புழுங்கல் அரிசி, பாஸ்மதி அரிசி, பச்சரிசி எந்த அரிசியாக இருந்தாலும் அதை ஐஸ் வாட்டரில் ஊற வைக்கலாம் தவறொன்றும் கிடையாது.)

ஐஸ் வாட்டரில் அந்த அரிசி 30 நிமிடங்கள் ஊறியதும், அந்தத் தண்ணீரை வடிகட்டி விட வேண்டும். அதன் பின்பு சாதாரண தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். 1 கப் அளவு பாஸ்மதி அரிசிக்கு 1 1/2 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். நீங்கள் சமையலுக்காக பயன்படுத்தும் சாதாரண புழுங்கல் அரிசி என்றால், 1 கப் அளவு புழுங்கல் அரிசிக்கு 2 கப் அளவுக்கு தண்ணீர் சரியானதாக இருக்கும். (எந்த கப்பில் அரிசியை அளந்து எடுக்கிறார்களோ, அதே கப்பில் தண்ணீரையும் அளந்து எடுக்க வேண்டும்.)

rice

பாசுமதி அரிசிக்கு குக்கரை முழுமையான தீயில் (high flame) வைத்து, வெறும் ஓரே ஒரு விசில் வைத்தாலே போதும். (சிலபேர் வெரைட்டி ரைஸை பச்சரிசியையிலும் செய்வார்கள். பச்சரிசுக்கும், பாசுமதி அரிசியின் பக்குவம் தான் பின்பற்றப்பட வேண்டும்.)

- Advertisement -

அதுவே நீங்கள் சமையலுக்காக பயன்படுத்தும் சாதாரண புழுங்கல் அரிசியாக இருந்தால், மிதமான தீயில் 2 விசில் விட வேண்டும். அரிசி சூப்பராக தயாராகியிருக்கும். அரிசி வெந்ததும் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விட்டு விடுங்கள். அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக கிடைக்கும்.

presure-cooker

அரிசியை குக்கரில் போட்டு விட்டு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி விட்டு, குக்கரின் மூடிக்கு உள்பக்கம் இருக்கும் பகுதியிலும், விசில் போடும் ஓட்டையிலும், கொஞ்சமாக நல்லெண்ணெய்யை தடவி விட்டு, அதன்பின்பு குக்கருக்கு மூடி போடுங்கள். அரிசி வெளியே பொங்கி வழியாமல் சூப்பராக தயாராகி இருக்கும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
புத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும், வறுமையும் இருக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.