புத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும், வறுமையும் இருக்காது.

poojai
- Advertisement -

நம்முடைய வீடும், நம் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் என்றைக்குமே சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய வேண்டுதலாக இருக்கிறது. கஷ்டமும், வறுமையும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துதான் புத்தாண்டை வரவேற்போம். இது எல்லோருடைய இயல்புதான். கடந்த வருடம் நாம் கடந்து வந்த கஷ்ட நஷ்டங்களுக்கு இந்த வருடமாவது விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கமும் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. நமக்கு இருக்கக்கூடிய எல்லாவகையான கஷ்டங்களும் நீங்க, வீட்டில் செல்வவளம் நிலைத்து நிற்க, வறுமை நீங்க இந்த புத்தாண்டை நம்முடைய வீட்டில் எப்படி வரவேற்கலாம் என்பதைப்பற்றிய வழிபாட்டு முறையை, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

புதிய வருடம் பிறக்கும் போது, காலையில் நம் வீட்டில் பூஜை செய்ய வேண்டுமென்றால், முந்தைய நாளே உங்களது வீட்டை சுத்தமாக துடைத்து, பூஜை பாத்திரங்களை கழுவி மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். புத்தாண்டு அன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே வீட்டில் இருக்கும் அனைவரும் தலை ஸ்னானம் செய்து, முடிந்தவர்கள் புத்தாடை அணிந்து, புத்தாடை அணிந்து கொள்ள முடியாதவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பூஜைக்கு தயாராக இருக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பிட்டுச் சொல்லப் போனால் காலை 6 மணிக்கு முன்பாக இந்த பூஜையை உங்கள் வீட்டில் நிறைவு செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில், பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. அதன் பின்பு ஒரு தாம்பூலத்தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மூன்று சிறிய கிண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

vilakku deepam

அந்த கிண்ணங்களில் புதியதாக வாங்கிய கல்லுப்பு, மஞ்சள் பொடி, துவரம்பருப்பு, இந்த மூன்று பொருட்களையும் நிரம்ப வைத்துக் கொள்ளலாம். அதன் மேலே ஒரு ரூபாய் நாணயங்களையும் வைத்து விடுங்கள். மூன்று கிண்ணத்தில் நிரப்பப்பட்டிருக்கும் பொருட்களுக்கு மேலே, அதாவது கல்லுப்பு, துவரம் பருப்பு, மஞ்சள் தூள் மேலே ஒவ்வொரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். மொத்தமாக மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள்.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல்லுப்பு துவரம் பருப்பும் நம் வீட்டில் தன தானியத்திற்கு எந்த ஒரு குறையையும் கொண்டுவராது. மங்களகரமான மஞ்சள் பொடியை புதியதாக வாங்கி கிண்ணத்தில் நிரப்பி வைத்து வழிபாடு செய்வது, நம் வீட்டிற்கு சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக. ஒரு ரூபாய் நாணயம், நம் வீட்டின் செல்வ செழிப்பு பணவரவு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக! (இந்தப் பொருட்களை எல்லாம் முந்தைய நாளே கடையிலிருந்து வாங்கி வந்து உங்கள் வீட்டில் புதியதாக வைத்துக் கொள்ளுங்கள்.)

manjal-uppu

இந்த பொருட்களோடு சேர்த்து இறைவனுக்கு உங்களால் முடிந்த இனிப்பு பலகாரத்தை நிவேதனமாக வைக்கலாம். இறுதியாக நம்முடைய வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கிண்ணத்தை தொட்டு, வணங்கி இந்த வருடம் பிறக்கக் கூடிய புத்தாண்டு எல்லோருக்கும் நன்மை தரும் வகையில் அமைய வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து இறைவனுக்கு தீப தூப ஆராதனைகள் காட்டி உங்களது பூஜையை சந்தோஷமாக நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

thuvaram-paruppu

அதன் பின்பு நீங்கள் பூஜையில் வைத்த உப்பு, மஞ்சள்பொடி துவரம்பருப்பை எடுத்து அன்றைய தினம் சமைப்பதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். சிலபேர் நினைக்கலாம் ஆங்கிலப்புத்தாண்டுக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவங்கள் என்று! New Year என்ற வார்த்தையை சொன்னதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது.

prayer

நம்முடைய மனது மகிழ்ச்சியாக இருக்கும்போது அந்த சமயத்தில், எந்த வேண்டுதல் வைத்தாலும் உடனே பலிக்கும். எந்த நல்ல நாளாக இருந்தாலும், அதை சந்தோஷத்தோடு வரவேற்பது தான் நம்முடைய பண்பாடு. இந்த உலகத்தில் வாழும் எல்லா ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை அந்த ஆண்டவனிடம் வைத்து எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அடிக்கடி பார்க்க வேண்டிய ஒரு விஷயம்? இதை பார்ப்பதால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? இப்படி மட்டும் செய்தால் வாழ்க்கை இனிமை தான்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -