இதுவரைக்கும் எத்தனையோ தட்டை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அரிசிமாவும் கீரையும் சேர்த்து நல்ல ஆரோக்கியமா அதே நேரத்தில் கிரிஸ்பியான இந்த தட்டை செய்யுங்க ஒரு வாரம் ஆனா கூட கெட்டே போகாது.

rice-flour-thattai_tamil
- Advertisement -

பொதுவாக எல்லோர் வீட்டிலும் எப்போதுமே ஏதாவது சில வகை ஸ்நாக்ஸ்களை வாங்கி வைத்திருப்பார்கள். அந்த ஸ்நாக்ஸ் வகைகள் பெரும்பாலும் எளிமையாக செய்வதாகவே இருக்கும். இந்த தட்டை வகைகளை யாரும் அவ்வளவாக வீட்டில் செய்து வைக்க மாட்டார்கள் இதை செய்வது கொஞ்சம் கடினம் என்று யோசித்து விட்டு விடுவார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்படி இந்த தட்டையை மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் கீரை சேர்த்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் இப்படி செய்து கொடுப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த தட்டை செய்வதற்கு முதலில் அடுப்பில் கடாய் வைத்து ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை ஊற வைத்து பின்னர் தண்ணீர் வடித்து விட்டு அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர், பட்டர் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயும் சேர்த்து செய்து கொள்ளலாம். மேலும் கால் டீஸ்பூன் பெருங்காயம், ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய கீரை இதற்கு நீங்கள் எந்த கீரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இவையெல்லாம் சேர்த்து நன்றாக கொதி வரும் போது இரண்டு கப் அரிசி மாவை இதில் சேர்க்க வேண்டும். அரிசி மாவை சேர்க்கும் போது அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக கை விடாமல் கிண்டிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

மாவை சேர்க்கும் போது மாவும் தண்ணீரும் ஒன்றாக ஒட்டாமல் உதிரி உதிரியாகத் தான் இருக்கும். அடுப்பிலிருந்து இறக்கி கை பொறுக்கும் அளவுக்கு வந்தவுடன் ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் உங்கள் கைகளை தொட்டு தொட்டு மாவை பிசைந்து கொள்ளுங்கள் மாவு முழுவதுமாக ஆறி விட்டால் பிசைய வராது. பிசைந்த இந்த மாவை கோலி குண்டு அளவிற்கு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக சப்பாத்தி மேக்கர் இருந்தால் அதன் மேல் ஒரு பட்டர் சீட் அல்லது பாலத்தீன் கவரை எண்ணெய் தடவி வைத்து விட்டு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தட்டைகளை ஒவ்வொன்றாக வைத்து மேலே ஒரு பட்டர் சீட் அல்லது கவர் வைத்து அழுத்தி எடுத்தால் அழகான வட்ட வடிவில் தட்டை தயாராகி விடும்.

உங்களிடம் சப்பாத்தி மேக்கர் இல்லை என்றால் சப்பாத்தி திரட்டும் பலகை மீது இதே பட்டர் சீட் அல்லது கவரை வைத்து அதன் மேல் இந்த உருண்டைகளை வைத்து வீட்டில் அடி அகலமான கிண்ணம் அல்லது பாக்ஸ் ஏதாவது இருந்தால் அதன் மேல் வைத்து அழுத்துங்கள் அழகான வட்ட வடிவில் தட்டை கிடைத்து விடும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு நாம் தயார் செய்து வைத்த தட்டைகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெயில் இருக்கும் பபுள்ஸ் அனைத்தும் அடங்கிய பிறகு இந்த தட்டை மேலே வெந்து வரும் அது வரை காத்திருந்து அதன் பிறகு எடுத்து ஆறிய பிறகு ஒரு டப்பாவில் போட்டு குளித்து விட்டால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீடே மணக்கும் அளவுக்கு வெறும் பத்தே நிமிடத்தில் மணக்க மணக்க பூண்டு ரசம் இப்படி வச்சு பாருங்க. இதை சாப்பாட்டில் ஊற்றி பிசைஞ்சு சாப்பிட மாட்டாங்க. டம்ளர்ல ஊத்தி குடிப்பாங்க.

குழந்தைகளுக்கும் நல்ல ஆரோக்கியமான முறையில் வீட்டிலே ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தது போலவும் இருக்கும் இந்த தட்டை ரெசிப்பி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -