தேங்காய் எண்ணெயை தலைக்கு இப்படி தடவினால், வேணாம் வேணாம் என்று சொன்னாலும் முடி வளரத்தான் செய்யும்.

hair15
- Advertisement -

வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் முடி வளர்ச்சியை கொடுக்கக் கூடிய தேங்காய் எண்ணெய் எதுவாக இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள். சுத்தமான அரிசி எண்ணெய் தான் அது. ரைஸ் ஆயில் என்று சொல்லலாம். இந்த ரைஸ் ஆயிலை தேங்காய் எண்ணெயை வைத்து தான் தயார் செய்யப் போகின்றோம். இந்த ரைஸ் ஆயில் கடைகளில் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் அது எந்த அளவிற்கு சுத்தமானது என்பது தெரியாது. நம்முடைய வீட்டிலேயே ரைஸ் ஆயிலை சுலபமான முறையில் எப்படி தயார் செய்து தலையில் தடவுவது என்பதை பற்றிய ஒரு குறிப்பு இதோ உங்களுக்காக.

பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரியும் அரிசி, முடி வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு தூண்டுகோலாக இருக்கும் என்பது. அரிசி கழுவிய தண்ணீர், அரிசி கஞ்சி இவைகளை தலைக்கு அப்ளை செய்யும்போது சில பேருக்கு தலைவலி சைனஸ் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அரிசியை எண்ணெயில் சேர்த்து தலையில் தேய்த்து பயன்படுத்தும் போது தலைபாரம், சைனஸ் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு கிடையாது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரைஸ் ஆயிலை எப்படி தயார் செய்வது என்று பார்த்து விடுவோம்.

- Advertisement -

சாதாரணமாக நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய அரிசியை விட கைக்குத்தல் அரிசியில் முழுமையான சத்து இருக்கும். கைக்குத்தல் அரிசி ஒரு 100 கிராம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு ரொம்பவும் நைசாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொடித்த அரிசியை சலித்துக் கூட பயன்படுத்தலாம் தவறு கிடையாது. நமக்கு நைசான கைக்குத்தல் அரிசி பவுடர் தான் தேவை.

இந்த பவுடரை கண்ணாடி பாட்டிலில் போட்டு தண்ணீர் படாமல் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் அரிசி பவுடருக்கு, 4 – ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நமக்கு தேவை. ஒரு சிறிய கிண்ணத்தில் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி, 1 ஸ்பூன் நாம் அரைத்து வைத்திருக்கும் அரிசி பொடியை போட்டு நன்றாக கலந்து இதை அடுப்பில் வைத்து லேசாக வெதுவெதுப்பாக சூடு செய்யுங்கள்.

- Advertisement -

வெதுவெதுப்பாக எண்ணெய் சூடாகி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். அரிசியில் இருக்கும் சத்து அந்த சூட்டிலேயே எண்ணெயில் இறங்கி இருக்கும். இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக இருக்கும் போது உங்களுடைய தலையில் மயிர் கால்களில் படும்படி தேய்த்து லேசாக மசாஜ் செய்து அப்படியே விட்டுவிட வேண்டும். இரவு இந்த எண்ணெயை தலையில் தடவிக் கொண்டால் மறுநாள் காலை தலைக்கு குளித்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் தலைக்கு குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாவது இந்த எண்ணெயை தலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி இல்லை என்றால் காய்ச்சிய இந்த எண்ணெயை நன்றாக வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலைக்கு தேய்க்க கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். அரிசி தண்ணீரை தலைக்கு போட்டால் அரிசி கஞ்சியை தலைக்கு போட்டால் என்ன போஷாக்கு தலை முடிக்கு கிடைக்குமோ, அதைவிட இரண்டு மடங்கு இந்த ரைஸ் ஆயிலை பயன்படுத்தும் போது நமக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கை குத்தல் அரிசி வாங்க முடியாது என்பவர்கள் வீட்டில் இருக்கும் சாப்பாட்டு அரிசியை அரைத்து கூட இந்த குறிப்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த குறிப்பு ட்ரை பண்ணி பாருங்க. ஒரே மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும்.

- Advertisement -