உங்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் தடுக்க இப்பரிகாரம் செய்யுங்கள் போதும்

accident

பூமியில் அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவித்து, இறுதியில் இறைவனை அடைய வேண்டியது மனிதர்களின் முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும் என ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். கடினமாக உழைத்து, செல்வம் திரட்டவும் சுகபோகங்களை அனுபவித்து வாழவும் இயற்கை தந்த அற்புதமான ஒரு பரிசு தான் மனித உடல். உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே மனமும் உற்சாகத்துடன் செயல்பட்டு வாழ்வில் அனைத்தையும் சாதிக்க முடியும். ஆனால் ஒரு சிலர் மட்டும் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் விபத்துக்குள்ளாதல் போன்றவற்றால் உடலாரோக்கிய குறைவு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் மேற்கூறிய குறையைத் தீர்த்து நன்மையைத் தரும் ஒரு எளிய பரிகார முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

accident

“பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்” என்பார்கள் அதுபோல சிலரின் வாழ்வில் ஏற்கனவே அனுபவிக்கின்ற துன்பங்கள், துயரங்கள் போதாதென்று கூடுதலான கஷ்டங்களும் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே உடல் நல பாதிப்பால் அவதிப்படுபவர்கள், மேலும் ஒரு புதிய வியாதி ஏற்பட்டு அவதிப்படுதல், சிலர் விபத்தில் காயமடைந்து அதிலிருந்து முழுவதுமாக குணமாவதற்குள்ளாக, மற்றொரு விபத்தில் சிக்கி காயம் அடைதல் போன்றவை அதிகம் ஏற்படுகிறது. இதனால் அந்த நபர்களும், அவர்களின் குடும்பத்தினரும் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து ஒரு விரக்தியான மனப்பான்மையை அடைகின்றனர்.

பொதுவாக அடிக்கடி காயப்படுபவர்கள், விபத்தில் சிக்குபவர்கள், நோய் பாதிப்பிற்குள்ளாகுபவர்கள் எதிலும் வேகமாக செயல்படுதல், சுற்றுப்புற சூழ்நிலையை கவனத்தில் கொள்ளாதது போன்ற காரணங்களாலேயே பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், சூட்சமமாக கவனித்தோமேயானால் அந்த நபர்களின் கர்மவினை மற்றும் கிரக நிலைகள், திசா புக்திகளில் ஏற்படும் பாதகமான நிலையால் அவ்வப்போது காயப்படுத்தல், உடல்நலப் பாதிப்பிற்குள்ளாவது போன்றவற்றால் துன்புற நேருகிறது என்பதே உண்மை நிலையாக இருக்கிறது.

arisi

வாழ்வில் இப்படிப்பட்ட சங்கடங்களை சந்திப்பார்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற அமாவாசைக்கு பிறகான முதல் செவ்வாய்க்கிழமை அன்று 400 கிராம் வெள்ளை அரிசியை எடுத்துக் கொண்டு, தண்ணீர் ஊற்றி அரிசியை கழுவுவது போல, சுத்தமான பசும் பாலை ஊற்றி அந்த அரிசியை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த அரிசியை எடுத்துக் கொண்டு, உங்கள் ஊருக்கு அருகில் ஓடுகின்ற நதிகளில் அந்த அரிசியை போட்டு விடவேண்டும். நதிகள் இல்லாத ஊரில் வசிப்பவர்கள் உங்கள் ஊரில் இருக்கின்ற கண்மாயின் நீரோட்டத்தில் அந்த அரிசியை போட வேண்டும் அல்லது ஏரியில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஓடுகின்ற நீரில் அரிசியை போட்டு விட வேண்டும்.

- Advertisement -

river aaru

இந்த பரிகாரத்தை முறையாக செய்வதால் அடிக்கடி விபத்தில் சிக்குவது, காயப்படுதல் உடல்நலக் குறைவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் நீங்கும். இதை ஒரு முறை செய்தாலே போதுமானது. பாதிக்கப்பட்டவரே இந்த பரிகாரத்தை செய்வது சிறந்தது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கும் நபர்களுக்காக அவர்களின் குடும்பத்தினர் எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
உண்மையான பக்திக்கு அத்தி வரதர் தந்த பரிசு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rice pariharam in Tamil. It is also called as Udal nalam pera in Tamil or Tantrika pariharangal in Tamil or Noi neenga pariharam in Tamil or Abathugal neenga in Tamil.