உண்மையான பக்திக்கு அத்தி வரதர் தந்த பரிசு – உண்மை சம்பவம்

athi-varadhar
- Advertisement -

தன்னை வெறுப்பவர்களுக்கும் மீண்டும் பிறவா முக்தி நிலையை அளிக்கவல்ல தெய்வமாக இருப்பவர் திருமால். அத்தகைய திருமாலுக்கு பாரதத்தில் எண்ணிலடங்கா கோயில்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆன்மீக பூமியான தமிழகத்தில் மட்டுமே திருமாலுக்குரிய மிக புகழ்பெற்ற ஆன்மீக சிறப்புகளைக் கொண்ட பல திருக்கோயில்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இக்கோயிலில் தான் அத்தி மரத்தில் பிரம்ம தேவரால் செய்யப்பட்ட அத்தி வரதர் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அப்படிப்பட்ட உன்னதமான தெய்வமான அத்திவரதர் நிகழ்த்திய ஒரு ஆன்மீக அற்புதத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நான் என்னும் அகந்தை மறைந்து இறைவனே அனைத்தும் எனும் நிலை உண்டாவது தான் பக்தி எனப்படுகிறது. அத்தகைய பக்திக்கு வயது, இனம், மதம், குலம், நிறம் போன்ற பேதங்கள் இல்லை. அந்த வகையில் காஞ்சிபுரம் அத்தி வரதராஜபெருமாள் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடம் அத்திவரதர் பெருமாளின் படங்களை விற்பனை செய்யும் தொழிலில் இரண்டு சிறுவர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த சிறுவர்களுக்கும் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்கிற தீவிர ஆசை இருந்தது. எனினும் தினமும் கோயிலில் ஏற்படும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக தங்களால் அத்திவரதரை தரிசிக்க முடியாத நிலையை எண்ணி வருந்தினர்.

- Advertisement -

எனினும் எப்படியாவது அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று எண்ணிய அந்த சிறுவர்கள் தங்களின் நிலை குறித்து அங்கு கூட்டத்தை நெறிப்படுத்தும் பணியில் இருந்த ஒரு காவல் துறை அதிகாரியிடம் கூறினார்கள். அச்சிறுவர்களின் நிலையை பார்த்த அந்த காவல்துறை அதிகாரி அந்த இரண்டு சிறுவர்களின் மீது இரக்கம் கொண்டு, விஐபி பாஸ் தரிசனம் வழி வழியாக அத்திவரதரை தரிசிக்க அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார். ஆனால் உள்ளே காவலுக்கு இருந்த மற்றொரு காவல்துறை அதிகாரி அந்த சிறுவர்களிடம் அவர்கள் எப்படி விஐபி தரிசனம் வழியாக வந்தார்கள் என்று கேட்டதோடு விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என கூறி நீங்கள் வெளியே செல்லுங்கள் என அச்சிறுவர்களை வெளியே அனுப்பிவிட்டார்.

இதனால் அந்த சிறுவர்கள் இருவரும் அழுதவாறே வெளியில் வந்ததைப் பார்த்த மற்றொரு காவல் துறை உயர் அதிகாரி அந்த சிறுவர்களை அழைத்து விசாரித்தபோது, அந்த சிறுவர்கள் தாங்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில் வசிப்பதாகவும், தங்களின் பெற்றோர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வெளியே தெய்வப்படங்களை விற்பவர்கள் எனவும், தங்களுக்கும் அத்தி வரதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் எனவும், ஆனால் தினமும் கூட்ட நெரிசல் காரணமாக தங்களால் உள்ளே சென்று அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை எனவும் இது பற்றி ஒரு காவல்துறை அதிகாரியிடம் கூறியபோது அவர் தங்களை விஐபி தரிசனம் வழியே உள்ளே சென்ற அனுமதித்ததாகவும், ஆனால் உள்ளே இருந்த காவல் அதிகாரி தங்களை வெளியே அனுப்பி விட்டதாகவும் கூறி வருத்தப்பட்டனர்.

- Advertisement -

athi varadhar

இதையெல்லாம் பொறுமையாக கேட்ட அந்த உயர் காவல்துறை அதிகாரி அந்த சிறுவர்களின் மீது கரிசனம் கொண்டு, அவர்களை “விவிஐபி” தரிசன வரிசை வழியாக மிக விரைவில் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு அனுமதி சீட்டு வழங்கி, அவர்களை உள்ளே அனுப்பினார். அந்த சிறுவர்களும் குறுகிய நேரத்திலேயே உள்ளே சென்று அத்தி வரதரை தரிசித்து, மிகவும் மகிழ்ச்சியாக கோவிலுக்கு வெளியே வந்து காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். இதையெல்லாம் அங்கு பார்த்துக் கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் அத்திவரதர் அந்த இரு சிறுவர்களின் பக்தியை மெச்சி மிக விரைவில் தனது தரிசனத்தை அந்த சிறுவர்களுக்கு கொடுத்து மகிழ்வித்திருப்பதாக கருதி பெருமாளின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தனர்.

இதையும் படிக்கலாமே:
மீனம் ராசி அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar bakthi in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadar vaibhavam in Tamil or Athi varadhar sirappugal in Tamil.

- Advertisement -