கொத்துக் கொத்தாக முடி உதிர்கிறதா? சட்டுனு நிறுத்த அரிசி களைந்த தண்ணீரை இனி கீழே ஊற்றி விடாதீங்க இப்படி செய்யுங்க!

hair-fall-rice-watr
- Advertisement -

பொதுவாக தலைமுடி அடர்த்தியாக, அழகாக இருந்தால் தான் முகமும் அழகாக தெரியும். தலை முடி கொத்துக் கொத்தாக உதிர்ந்தால் நாளடைவில் முக அழகும் கெட்டுப் போய்விடும். தலைமுடி பராமரிப்புக்கு ரொம்பவே முக்கியமான ஒரு பொருள் அரிசி களைந்த தண்ணீர்! இந்த தண்ணீரை எப்படி பயன்படுத்தினால் கொத்துக் கொத்தாக உதிர்ந்த முடியை சட்டுனு நிறுத்தி விட முடியும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முடி உதிர்தல் பிரச்சனை ஆண், பெண் பாகுபாடின்றி இன்று மாறி வரும் உணவு முறை பழக்கம் மற்றும் தொழில் நுட்பங்களால் அதிகரித்து வருகிறது. முடி உதிர்தல் பிரச்சனை ஆரம்பத்திலேயே தடுத்து விட்டால், அதை எளிதாக சரி செய்து விடலாம். ஆனால் நாம் அஜாக்கிரதையாக விட்டுவிட்டு பிறகு அய்யோ, அம்மா என்று புலம்பினாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும் அபாயம் உண்டு. எனவே முடி உதிர்தல் பிரச்சனை ஆரம்பத்திலேயே இருப்பவர்கள் இதை ட்ரை பண்ணி பாருங்க, இருக்கின்ற முடியை காப்பாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

அரிசி களைந்த நீரில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதை தலைமுடிக்கு நல்ல ஊட்டசத்து மருந்தாக நாம் இப்போது தயாரித்துக் கொடுக்க இருக்கிறோம். முந்தைய நாள் அரிசி களைந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அரிசி களைந்த தண்ணீரை சேகரிக்கும் போது எப்பொழுதும் முதல் தண்ணீரை பயன்படுத்த கூடாது. ஒரு முறை தண்ணீர் ஊற்றி அலசி விட்ட பின்பு, இரண்டாம் முறை தண்ணீர் ஊற்றி நன்கு அரிசியை களைந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை தான் தலைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து 24 மணி நேரம் அதாவது மறுநாள் காலையில் எடுத்துப் பார்த்தால் அதில் நுண்ணுயிரிகள் அதிகம் பெருகி இருக்கும். அதை அப்படியே வைத்து விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அரை டீஸ்பூன் மிளகு இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கால் டம்ளராக நன்கு அடுப்பில் கொதிக்க வைத்து சுண்ட விட வேண்டும்.

- Advertisement -

கால் டம்ளராக வற்றியதும் அப்படியே அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறிய பின்பு அந்த தண்ணீருடன் நீங்கள் அரிசி களைந்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அப்படியே வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம், அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைமுடி முழுவதும் ஸ்ப்ரே செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் தலைக்கு அலசினால் நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி ஸ்பிரே செய்து ஊற விட்டு பின்னர் தலைக்கு மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு அலசி வந்தால் வழுக்கைத் தலையில் கூட முடி முளைக்க துவங்கும். அந்த அளவிற்கு ரொம்பவே ஆற்றல் கொண்டுள்ள இந்த எளிய குறிப்பை பயன்படுத்தி கொத்துக் கொத்தாக உதிரும் முடியை சட்டென நிறுத்திக் கொள்ளலாம். வாரம் 2 முறை என்று ஒரு மாதம் தொடர்ந்து செய்து பாருங்கள், உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி முளைக்கத் துவங்கும்.

- Advertisement -