எந்த மாவும் சேர்க்காமல் சூப்பரான இந்த மொறு மொறு போண்டா சுடுவது எப்படி? சோடா உப்பு கூட போட வேண்டாம். அப்படியே புசுபுசுன்னு போண்டா பொங்கி வரும் பாத்துக்கோங்க.

bonda
- Advertisement -

எந்த மாவும் சேர்க்காமல் பிறகு போண்டா எப்படி வரும் என்று தானே யோசிக்கிறீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து தான் இந்த போண்டாவை செய்யப்போகின்றோம். அச்சச்சோ, அரிசியை வைத்து ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த போண்டா செய்ய வேண்டுமா? என்று பயந்துவிடாதீர்கள். ரொம்ப ரொம்ப ஈசியா சூப்பரான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான் இது. பதிவை முழுமையாகப் படியுங்கள். பிறகு ஒரே ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈவ்னிங் டீ குடிக்கும்போது ஸ்நாக்ஸாக செய்து கொள்ளுங்கள். சரி குறிப்புகள் போலாம் வாங்க.

முதலில் 1 கப் அளவு அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த அரிசி மூழ்கும் அளவிற்கு சுடு தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்த அரிசி அப்படியே ஊறிக் கொண்டு இருக்கட்டும். பச்சரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இதற்குள் குக்கரில் 2 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை போட்டு கொஞ்சம் உப்பு போட்டு வேக வைத்து தோலுரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருளைக்கிழங்கும் அப்படியே இருக்கட்டும். உருளைக்கிழங்கு மசாலாவுக்கு வேக வைப்போம்ல அந்த பக்குவத்தில்.

அடுத்தபடியாக மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். சுடுதண்ணீரயில் ஊறிய அரிசியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு, முதலில் 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் மட்டும் விட்டு ஸ்மூத்தாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி அரைந்து வந்தவுடன் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை லேசாக மசித்து இந்த அரிசியோடு போட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரை ஓடவிடுங்கள். அரிசியும் உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு மாவு நமக்குக் கிடைத்திருக்கும். இதை ஒரு அகலமான பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். (திக்கான மாவாக அரைக்க வேண்டும். தண்ணீர் நிறைய ஊட்டி விடக் கூடாது.)

- Advertisement -

இப்போது பவுலில் இருக்கும் மாவை ஒரு கரண்டி அல்லது விஸ்க் வைத்து நன்றாக அடித்துக்கலக்க வேண்டும். மாவு புசுபுசுவென வரவேண்டும். 5 நிமிடங்கள் அடித்து கலக்குங்கள். இந்த மாவுடன் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லித் தழை, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட்டு ஒரு மூடியைப் போட்டு 5 நிமிடங்கள் வரை மாவை ஊற வைத்துவிடுங்கள்.

இதற்குள் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் காய வைத்துக்கொள்ளுங்கள். தயாராக இருக்கும் மாவு, இட்லி மாவை விட கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும். குழி கரண்டியில் மாவை எடுத்து அப்படியே எண்ணெயில் அப்பம் வார்ப்பதுபோல ஊற்றவேண்டும். ஆனால் இது போண்டா போல தான் குண்டு குண்டாக எழும்பி வரும்.

சிறிய குழி கரண்டியில் ஒவ்வொரு கரண்டியாக எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றி மிதமான தீயில் இந்த போண்டாவை சிவக்க வைத்து எடுத்து ருசித்துப் பாருங்கள். அப்பப்பா அருமையான வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும். தொட்டுக்கொள்ள காரசாரமான ஒரு தேங்காய் சட்னி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா மிஸ் பண்ணாதீங்க. இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -