ரிக் வேதத்தில் உள்ள விஞ்ஞானத்தை கண்டு வாய் பிளக்கும் விஞ்ஞானிகள்

Rig-vedha-Tamil-1

இன்றைய நவீன யுகத்தில் அறிவியில் மற்றும் விஞ்ஞானமே அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. சமயத்தில் அது மனிதனின் கற்பனைக்கும் எட்டாத, அவனது சக்திக்கும் சாத்திய படாத பல விடயங்களை சாத்தியமாக்குகின்றன. சில அறிவியல் உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளும் போது அவை சமீப நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிகிறோம். ஆனால் உலகின் பல நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில், பாரதம் பல விடயங்களில் உச்சத்தை தொட்டுருந்தது. அதில் ஒன்று தான் வானியல் மற்றும் புவியியல் இதை பற்றி நம் பண்டைய வேதங்கள் என்ன கூறியிருக்கின்றன என்று பார்ப்போம்.

Vedhas

உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதங்களின் தலைவர்கள், அவர்களின் நாட்டில் அவர்கள் பின்பற்றும் மத கொள்கைகளுக்கு முரணான விஞ்ஞான கண்டுபிடிப்புகளையோ அல்லது கொள்கைகளையே எவரேனும் வெளியிட்டால் அவர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாகவே பாரத கலாச்சாரமும் அதன் மதமாகிய சனாதன தர்மம் மெய்ஞ்ஞானத்துடன், விஞ்ஞானத்தை கலந்தே போற்றியிருக்கின்றன விஞ்ஞானிகளை ஊக்குவித்திருக்கின்றது.

இந்து மதத்தின் அடிப்படையே “ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண” வேதங்கள் ஆகும். இதில் “ரிக் வேதம்” பல வானியல் சாத்திர உண்மைகளை கொண்டதாக இருக்கிறது. ஐரோப்பாவில் கோப்பர்நிக்கஸ், கலிலியோ போன்ற புவியியல் ஆய்வாளர்கள் பூமி உருண்டையானது, அது ஒரு வருட காலத்தில் சூரியனை முழுவதுமாக சுற்றி வருகிறதாக கூறினர். இதற்கு 6000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உண்மை ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

Thiyanam

17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டறிந்து கூறியதாக நாம் பொதுவாக அறிந்திருக்கிறோம். ஆனால் பழமையான ரிக் வேதத்தில், சூரியனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் இயற்கையிலேயே இருக்கும் ஈர்ப்புவிசை காரணமாக அவை மற்றொரு கிரகத்துடன் மோதிக்கொள்ளாமல் இருப்பதாக ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. மேலும் இந்த பிரபஞ்சத்தில் பல சூரிய மண்டலங்கள் இருப்பதாக ரிக் வேதம் கூறுகிறது. நவீன மேற்கத்திய விஞ்ஞானிகள் கடந்த நூற்றாண்டில் தான் விண்ணில் பல சூரிய மண்டலங்கள் இருப்பதை உண்மை என ஏற்று கொண்டனர்.

- Advertisement -

Suriya puyal

பகலில் சூரியன் வெளிச்சத்தை தருகிறது. இரவில் சந்திரன் வெளிச்சத்தை தருகிறது. இந்த சந்திரன், சூரியனின் வெளிச்சத்தை வாங்கி அதை இரவு நேரத்தில் பூமியில் பிரதிபலிக்கிறது என்பதை மேற்கத்திய விஞ்ஞானிகள் சமீப நூற்றாண்டுகளிலேயே உறுதிப்படுத்தினர். ஆனால் ரிக் வேதத்தில் சந்திரன் சூரியனின் ஒளியை உள்வாங்கி இரவில் பிரதிபலிக்கிறது என்பதை எளிமையாக கூறிவிட்டனர்.

Moondram pirai

இன்று சூரிய குடும்பத்தில் இருக்கும் “யுரேனஸ், நெப்ட்யூன்” கிரகங்கள் இருப்பதை 1846 ஆம் ஆண்டு ஜெர்மானிய வானியலாளர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால் 6000 வருடங்களுக்கு முன்பு நடந்தாக கருதப்படும் மகாபாரத காவியத்தில் வேத வியாசர் பச்சை மற்றும் வெள்ளை நிறங்கலந்த யுரேனஸ் கிரகத்தை “ஸ்வேத” என்றும் நீலம் மற்றும் வெள்ளை நிறம் நெப்ட்யூன் “ஷ்யாமா” என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி இன்னும் ஏராளமான அறிவியல் சார்ந்த உண்மைகள் நம் நூல்களில் பொதிந்துள்ளன. இதை கண்டு நாவீன யுக விஞ்ஞானிகள் பலர் அசந்துபோய் உள்ளனர். ஆனால் நாமோ மேற்கத்திய நூல்களையும் கலாச்சாரத்தையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

இதையும் படிக்கலாமே:
ராமாயண காலத்தில் இத்தகைய அறிவியல் வளர்ச்சியா ? ஆச்சர்யப்படும் விஞ்ஞானிகள்

English Overview:
Here we described some scientific research in Rig Veda in Tamil. Rig Vedham is one of the Vedha which contains huge collection of research in it.