ராமாயண காலத்தில் இத்தகைய அறிவியல் வளர்ச்சியா ? ஆச்சர்யப்படும் விஞ்ஞானிகள்

vimana

மனித பிறவியை பாவப்பட்ட பிறவி என சில மதங்கள் இன்னும் நம்புகின்றன. ஆனால் மனிதன் தெய்வ நிலையை தன் சொந்த முயற்சியால் அடையவே இந்த பூமியில் பிறந்துள்ளான் என நமது வேதங்கள் ஊக்குவிக்கின்றன. மனிதன் தனது ஆறாவது அறிவை கொண்டு காலந்தோறும் பல புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறான். இன்று நாம் பல வகையான அதிவேக விஞ்ஞான, அறிவியல் கண்டுபிடிப்புகளை காண்கிறோம். ஆனால் புராண மற்றும் வேத காலங்களிலேயே இப்படியான சில அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்ததற்கான சில சாத்திய கூறுகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கு காண்போம்.

ramayanam

ராமாயண நாயகனாக ஸ்ரீ ராமரின் தந்தையும் அயோத்திய மன்னனுமான தசரதனிடம் ஒரு அற்புத சக்தி வாய்ந்த ரதம் இருந்ததாகவும், அந்த ரதத்தில் ஏறி விண்வெளியில் பயணித்து வேற்றுலக அரக்கர்களுடன் அவர் போர் புரிந்ததாக அந்த புராணம் கூறுகிறது.

மன்னர் ஜனகரின் மகள் சீதா தேவி ஆவார். இந்த ஜனகரின் அரண்மனையில் ஒரு அறையில் கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும் வகையில், அந்த அறைக்கு அருகில் இருந்த ஒரு சிறிய குளத்திலிருந்து நீரை சிறு துளிகளாக தொடர்ந்து தெளிக்கும் வண்ணம் ஒரு கருவி நிறுவப்பட்டிருந்ததாகவும், அந்த அறைக்கு குளிர்ச்சி என பொருள்படும் “சீதள அறை” என பெயரிடப்பட்டதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். அந்த குளிர்ச்சியான அறையில் தொடர்ந்து வாழ்ந்து, வளர்ந்து வந்ததால் தான் குளிர்ந்த மனதையும், உடலையும் பெற்ற காரணத்தால் குளிர்ச்சியானவள் என பொருள் படும் “சீதா” என பெயர் சீதை பெற்றதாக ஒரு வரலாறு இருக்கிறது.

மஹாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களில் வரும் பீமன் மிகுந்த உடல் வலிமை மிக்கவர். அதிலும் குறிப்பாக மல்யுத்த கலையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். அவர் மனிதர்களுடன் மல்யுத்தம் புரிந்து அவர்களை சுலபமாக தோற்கடித்ததால், அவர் மல்யுத்த பயிற்சி பெற அவருக்கென்று ஒரு இரும்பாலான எந்திர மனித பொம்மையை உருவாக்கப்பட்டது எனவும், அதனுடன் அவ்வப்போது பீமன் மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்புக்கள் கூறுகின்றன.

Mahabharatham

மேலும் இன்றைய நவீன ஆங்கில வழி மருத்துவ முறையில் பின்பற்றப்படும் சிகிச்சை முறைகளும், அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் மருத்துவ கருவிகள் அப்படியே நமது பண்டைய தமிழ் சித்தர்கள் கையாண்ட அறுவை சிகிச்சை கருவிகளை ஒத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பிரசவத்தின் போது குழந்தையை வெளியே எடுக்கும் கருவியும், அறுவை சிகிச்சையின் போது ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் கருவியும் இந்த தமிழ் சித்தர்கள் உருவாக்கிய மருத்துவ கருவியை ஒத்திருக்கிறது. இது போல் இன்னும் பல நம் நாட்டு அறிவியல் சிந்தனைகள் மற்றும் கண்டுபிடுப்புகள் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளன. நமது முன்னோர்களின் அறிவாற்றலை கண்டு இன்றும் பல விஞ்ஞானிகள் வியந்த வண்ணம் தான் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானத்தை கண்டுபித்த சித்தர்கள். ஒரு ஆதார பதிவு

English Overview:
Here we discussed a few inventions which were there in India. It includes the invention in Ramayana and Mahabaratha