Astrology : ரிஷபம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட இதை செய்யுங்கள்

rishabam
- Advertisement -

மனிதர்கள் அனைவருமே நவகோள்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு தான் இருக்கின்றனர். இந்த 12 ராசிகளில் முதல் ராசியான மேஷத்திற்கு அடுத்து இரண்டாவது ராசியாக வரும் ராசி “ரிஷபம்” ராசி ஆகும். இந்த ரிஷப ராசியினர் தங்களின் வாழ்நாளில் பொருளாதார ரீதியிலான அதிர்ஷ்டங்களை ஆதிக்கம் பெறுவதற்கான எளிமையான பரிகாரங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

12 ராசிகளில் இரண்டாவதாக வரும் ரிஷப ராசி சுகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் பகவானுக்குரிய ராசியாகும். ஜோதிடத்தில் ரிஷப ராசிக்குரிய சின்னமாக எருது இருக்கிறது. ரிஷப நல்ல மன உறுதி கொண்டவர்கள். பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்கள் ஓரளவிற்கு செல்வ செழிப்புள்ள குடும்பங்களிலேயே பிறக்கின்றனர். வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் என்றென்றும் நன்மைகளும், அதிர்ஷ்டங்களும் ஏற்பட கீழ்கண்ட பரிகாரங்களை திடசித்ததோடு செய்து வருவது சிறந்த பலன்களை கொடுக்கும்

- Advertisement -

ரிஷப ராசியினர் தங்களின் வாழ்வில் பொருளாதார ரீதியான அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதற்கு வருடத்தில் ஒரு முறையாவது தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு வெள்ளை நிற தாமரைப் பூ, மல்லிகை பூ ஆகியவற்றை சமர்ப்பித்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். வெள்ளிக் கிழமைகள் தோறும் சுக்கிர பகவானுக்கு சுக்கிர விரதம் இருப்பது உங்களின் செல்வ வளத்தை பல மடங்கு பெருக செய்யும் சக்தி வாய்ந்ததாகும். இந்தச் சுக்கிர விரதம் இருக்கும் சமயம் ஆண்கள் வெள்ளை நிற ஆடையும் பெண்கள் சிவப்பு நிற ஆடையையும் அணிந்து கொள்ள வேண்டும் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்குரிய துர்க்கை சப்தசதி ஸ்தோத்திரங்களை துதித்து வர வேண்டும்.

sukran

ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தில் வசதி குறைந்தவர்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானமாகத் தருவது சிறந்த பலனளிக்கும். இந்த ஆடை தானம் தரும் போது, பால், தயிர், சர்க்கரை போன்றவற்றையும் சேர்த்து தானமாக தந்தால் பலன் பன்மடங்கு அதிகரிக்கும். ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் புண்ணிய நதிக்குச் சென்று அந்த நதி நீரில் தூய்மையான வெல்லத்தை கரைத்து வழிபடுவதால் உங்களின் தோஷம் நீங்கி தொழில் வியாபாரங்களில் பணமுடை ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தொழில், வியாபாரங்களில் பன்மடங்கு லாபம் கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rishaba rasi tips in Tamil. It is also called as Rishaba rasi pariharam in Tamil or Rishaba rasi in Tamil or Rasi pariharam in Tamil or Rishabam rasi pariharam in Tamil.

- Advertisement -