ரோட்டு கடை ஸ்பெஷல் குட்டி குட்டி போண்டாவை இப்படித்தான் செய்வார்களா? ஈவினிங் டீ போடும் நேரத்தில் சட்டுனு இந்த போண்டாவை தயார் செய்யலாம் வாங்க.

bonda6
- Advertisement -

ரோட்டு கடை ஸ்பெஷல் குட்டி குட்டி பூண்டாவை நம்முடைய வீட்டிலேயே பக்குவமாக எப்படி சுடுவது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஈவினிங் டீ குடிக்கும் போது ஏதாவது சுட சுட சாப்பிட தோன்றினால் இந்த போண்டாவை சட்டுனு செய்யலாம். கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அந்த சமயம் இந்த போண்டாவோடு ஒரு கார சட்னி தொட்டு சாப்பிட்டால் அடடா வேற என்ன வேண்டும். கூடவே சூடா டீ அல்லது காபி. சொர்க்கம் தாங்க. வாங்க நேரத்தை கடத்தாமல் நாமும் இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், மிகப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கருவாப்பிலை – 2 கொத்து, தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, உப்பு – சிறிதளவு, போட்டு இந்த பொருட்களை எல்லாம் உங்கள் கையை கொண்டு முதலில் நன்றாக பிசைந்து விடுங்கள். கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் பிசையுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக இதில் மைதா மாவு – 1/4 கப், நம்முடைய வீட்டில் இருக்கும் அரிசி மாவு – 1/4 கப், சேர்த்து இந்த மாவை பிசைவதற்கு தேவையான அளவு இட்லி மாவு ஊற்ற வேண்டும். (ஒரு நாள் புளித்த இட்லி மாவு தான் பயன்படுத்த வேண்டும்.) ஏறக்குறைய 1/2 கப் அளவு – இட்லி மாவை ஊற்றி இந்த மாவை நன்றாகப் பிசையுங்கள். மாவு போண்டா மாவு பதத்திற்கு வரவேண்டும்.

ரொம்பவும் திக்காக இருந்தால் இன்னும் கொஞ்சம் இட்லி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் தண்ணீராக இருக்கும் பட்சத்தில் கூடவே இன்னும் கொஞ்சம் மைதா மாவு, அரிசி மாவு சேர்த்து கலக்க வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

- Advertisement -

மாவை பிசைந்து மூடி போட்டு பத்து நிமிடம் ஊற வையுங்கள். இதற்குள்ள அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்யுங்கள். மாவு 10 நிமிடம் ஊறி வந்த பிறகு இதில் 1 சிட்டிகை – ஆப்ப சோடா மாவு, போட்டு உங்கள் கையை கொண்டு மாவை மீண்டும் ஒருமுறை நன்றாக பிசைந்து சுடச்சுட இருக்கும் எண்ணெயில் குட்டி குட்டி போண்டாக்களை விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மேலே மொறுமொறுப்பாக உள்ளே பஞ்சு போல சூப்பரான போண்டா தயார்.

இதையும் படிக்கலாமே: மகாராஷ்டிரா ஸ்டைலில் முட்டை கிரேவி செய்முறை

இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய் சட்னி வைக்கலாம். இல்லையென்றால் காரசாரமான காரச் சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள் வேற லெவல் டேஸ்ட் இருக்குங்க. இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம இன்னிக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -