மகாராஷ்டிரா ஸ்டைலில் சூப்பரான இந்த கிரேவிய செஞ்சு பாருங்க செஞ்ச உடனே டக்குனு காலி ஆயிடும். இட்லி தோசை சப்பாத்தி சாதம் என எல்லாத்துக்குமே வெச்சி சாப்பிட ரொம்ப அருமையா இருக்கும் ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

உணவு வகைகளை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப அது செய்யும் விதங்கள் மாறுபடும். ஒரே உணவையே பலரும் பல வகையில் செய்வார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் மகாராஷ்டிரா ஸ்டைலில் ஒரு சூப்பரான முட்டை கிரேவி எப்படி செய்வது என்று தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

செய்முறை

இந்த முட்டை கிரேவி செய்வதற்கு முதலில் ஐந்து முந்திரி, 5 காய்ந்த மிளகாய் இவை இரண்டையும் தனித் தனியாக கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் இரண்டு பெரிய பழுத்த தக்காளியை சின்னதாக நறுக்கி சேர்த்து அத்துடன் இரண்டு பல் பூண்டு, ஊற வைத்த முந்திரி ஊற வைத்த காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து நல்ல ஒரு பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து பேனில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இரண்டு பட்டை, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை இவையெல்லாம் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த தக்காளி விழுதையும் சேர்த்து இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் கஸ்தூரி மேத்தி இவை அனைத்தையும் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நான்கு முட்டையை உடைத்து ஊற்றி அப்படியே மூடி வைத்து விடுங்கள். முட்டையை திருப்பி போட்டு வேக வைக்க கூடாது.

பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை மேலே தூவி உங்களிடம் சீஸ் இருந்தால் அதை துருவி மேலே போட்டு இறக்கி விடுங்கள். இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ராகி மாவு வாங்கினா 10 நிமிஷத்தில் மொறு மொறுன்னு இப்படி கூட ஹெல்த்தி தோசை சுடலாமே! எதுக்கு இனி அடிக்கடி இட்லி மாவு அரைக்கணும்?

இந்த கிரேவி சுடச்சுட சாதம் தோசை சப்பாத்தி பூரி என அனைத்துக்குமே பிரமாதமாக இருக்கும் முட்டை வைத்து நாம் சாதாரணமாக எப்போதும் செய்வது போல் இல்லாமல் இப்படி கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -