தள்ளுவண்டி கடை சுண்டலை, நம்முடைய வீட்டில் இன்னைக்கு ட்ரை பண்ணி பாக்கலாமா? வெறும் 15 நிமிடம் போதும்.

sundal
- Advertisement -

பச்சைப் பட்டாணியை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துவிட்டால், மறுநாள் இந்த சுண்டலை சுலபமாக செய்து விடலாம். மாலை நேரத்தில் உங்களுக்கு இந்த சுண்டல் தேவைப்படும் என்றால், காலை எழுந்தவுடன் இந்த பச்சை பட்டாணியை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது லாக்டவுன் சமயம் என்பதால் உங்களுடைய வீட்டில் பச்சை பட்டாணி இல்லை என்றால், வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை, வெள்ளை பட்டாணி, இப்படி எதில் வேண்டும் என்றாலும் இந்த சுண்டலை செய்து பரிமாறிக் கொள்ளலாம். ரோட்டுக்கடை சுண்டல் ரெசிபியை நம் வீட்டில் இருந்தபடி எப்படி சுலபமாக செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

pachai pattani

200 கிராம் அளவு பச்சை பட்டாணியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, கழுவி குக்கரில் போட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி கொஞ்சமாக உப்பு, கொஞ்சமாக மஞ்சள் தூள், சேர்த்து 5 லிருந்து 6 விசில் விட்டு வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் கொஞ்சம் சிறு துண்டுகளாக வெட்டியது, ஒரு மீடியம் சைஸ் தக்காளி நான்காக வெட்டிக் கொள்ளுங்கள். தோலுரித்த பூண்டு 6 பல், சிறிய பின்ச் இஞ்சி, இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். (வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு).

sundal1

ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதை ஊற்றி, பச்சை வாடை போகும் வரை வதக்கி விட வேண்டும். இதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் மிளகாய்தூள் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து 30 செகண்ட்ஸ் வதக்கி கொள்ளவும். கரம் மசாலா வீட்டில் இல்லை என்றால் பட்டை லவங்கம் இந்த பொருட்களை எண்ணெயோடு தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இறுதியாக மசாலாவிற்கு தேவையான உப்பை சேர்த்து, ஒருமுறை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக வேகவைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை இந்த மசாலாவுடன் சேர்க்க வேண்டும். பச்சை பட்டாணியில் கொஞ்சம் நிறைய தண்ணீர் இருக்கும். எல்லா தண்ணீரையும் சுண்டலில் ஊற்றி விடாதீர்கள். சுண்டல் கொஞ்சம் திக்காக இருந்தால், தான் நன்றாக இருக்கும். தேவையான அளவு தண்ணீரை மட்டும் இதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

sundal2

வேகவைத்த சுண்டலையும், கடாயில் இருக்கும் மசாலாவையும் நன்றாக ஒன்றாக கிளறி 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டால் போதும். சூப்பரான சுவையான சுண்டல் தயார். இந்த சுண்டலை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். இதற்கும் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய மாங்காய், கொத்தமல்லி தழைகளைத் தூவி உங்கள் இஷ்டம் போல பரிமாறிக் கொள்ளுங்கள். எப்படி? சூப்பர் சுண்டல் தயாரா. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா நாளைக்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -