ரோட்டு கடை மிளகாய் சட்னியின் ரகசியம் இது தான். நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

chutney5

காரச் சட்னி, மிளகாய் சட்னி என்று சொல்லப்படும் ரோட்டு கடைகளில் கிடைக்கும் சிவப்பு நிற சட்னியை நினைக்கும் போதே நாக்கில் எச்சி ஊறும். அந்த அளவிற்கு காரசாரமான சுவையான கார சட்னி எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்ன சின்ன டிப்ஸை பின்பற்றி மிளகாய் சட்னியை ஒருமுறை அரைத்துப் பாருங்கள். இதன் சுவையும் வித்தியாசமாக இருக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. வாங்க ரெசிபிக்கு போகலாம்.

chutney4

முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி 4 லிருந்து 5 வரமிளகாய் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். அதாவது மிளகாய் மொறுமொறுவென மாறவேண்டும். காம்பை எடுக்காமல் தான் வறுக்க வேண்டும் என்பது நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிவந்த மிளகாயை ஒரு தட்டில் எடுத்து ஓரமாக வைத்து விடுங்கள். வறுக்கும் மிளகாய் எக்காரணத்தைக் கொண்டும் கருப்பாக மாற கூடாது.

இரண்டாவதாக மீடியம் சைஸில் இருக்கும் 3 பெரிய வெங்காயம் எடுத்து கொஞ்சம் சிறியதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 2 மீடியம் சைஸில் இருக்கும் 2 தக்காளி பழங்களை எடுத்து கொஞ்சம் பெரியதாக, அதாவது நான்கு துண்டுகளாக நறுக்கினால் போதும். இப்போது நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி இரண்டையும் கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.

tomato-chutney1

தக்காளியை தொக்கு பதத்திற்கு வதக்கி விட கூடாது. தக்காளியின் பச்சை வாடை நீங்கி, மேலே இருக்கும் தோல் சுருங்கி வரும் அளவிற்கு வதங்கினால் மட்டும் போதும். அடுப்பை அணைத்து விட்டு இறுதியாக நான்கிலிருந்து ஐந்து பல் பூண்டை கடாயில் சேர்த்து விடுங்கள். இது அப்படியே ஆரட்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் வறுத்து வைத்த வரமிளகாயை காம்பை உடைத்து விட்டு, மிளகாயை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இரண்டாவதாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி இவைகளிலிருந்து, தக்காளி துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பை இந்த இடத்தில் தான் போடவேண்டும். இப்போது தக்காளி மிளகாய் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

அதன்பின்பு வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து மிக்ஸியை இரண்டு முறை ரிவர்ஸ் பட்டனில் ஓட்டினால் கூட போதும். வெங்காயம் கொரகொரப்பாக அரைபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீராகவும் கரைக்கக் கூடாது. ரொம்பவும் கட்டியாகவும் கரைக்கக் கூடாது.

இந்த சட்னியில் லேசாக கொரகொரப்பாக ஆங்காங்கே வெங்காயம் தெரிய வேண்டும். அப்போதுதான் ரோட்டு கடை சட்னி நமக்கு கிடைக்கும். இந்த சட்னிக்கு இறுதியாக நல்லெண்ணெயில் கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து சேர்த்து பரிமாறினால், சுவையாக இருக்கும். உங்களுடைய வீட்டிலும் மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல சுவையில் சட்னி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஈறு தொல்லையிலிருந்து 2 மணி நேரத்தில் விடுபட இந்த எண்ணெயை தேய்த்து தலைக்கு குளித்தாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.