ரோட்டுக்கடை தக்காளி சட்னியின் சுவைக்கு ரகசிய காரணம் 1 ஸ்பூன் இந்த பொடி தான். ஒருவாட்டி உங்க வீட்லயும் இந்த மாதிரி தக்காளி சட்னி செஞ்சு பாருங்க!

tomato-chutney
- Advertisement -

நம்முடைய வீட்டில் நாம் செய்யும் தக்காளி சட்னியை விட, சில ரோட்டு கடைகளில் கொடுக்கும் தக்காளி சட்னிகு சுவை அதிகமாக இருக்கும். சில ஹோட்டல்களில் வைக்கும் தக்காளி சட்னியின் சுவை கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கும். அந்த சுவைக்கு ரகசிய காரணம் என்ன? அவர்கள் அந்த தக்காளி சட்னியுடன் சேர்க்கும் அந்த ரகசிய பொருள் என்ன என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சூப்பரான தக்காளி சட்னி ரெசிபி உங்களுக்காக!

tomato

முதலில் 1 கிலோ அளவு தக்காளி பழத்தை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் அந்த தக்காளி பழங்களை மாற்றி, தக்காளி பழம் மூழ்கும் அளவிற்கு, தக்காளிப்பழம் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவேண்டும். அந்த தண்ணீரில் ஒரு சிறிய துண்டு, ஒரு பின்ச் அளவு புளி போட்டுக் கொள்ளுங்கள். 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தக்காளிப்பழம் வெந்து தண்ணீர் சுண்டி, மீதம் 1/4 கப் அளவு தண்ணீர் இருந்தால் போதும். மிதமான தீயில் 10 நிமிடங்கள் தக்காளிப்பழத்தை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

வெந்த தக்காளிப்பழத்தை, சிறிய புளி துண்டோடு அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட்டு நன்றாக ஆற விட்டு விடுங்கள். அதை அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அதிலிருக்கும் தண்ணீரை வைத்து விழுது போல் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

tomato

அடுத்தபடியாக ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் சீரகம் 1 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், சேர்த்து பக்குவமாக வறுத்து எடுக்க வேண்டும். எண்ணெய் ஊற்றாமல் ட்ரை ஃப்ரை தான் பண்ண வேண்டும். இந்த 3 பொருட்களும் வறுபடாமலும் இருக்கக்கூடாது. கருகவும் விடக்கூடாது. வாசம் வரும் அளவிற்கு சரியான பக்குவத்தில் சிவக்க வேண்டும். உங்களுக்கு 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வறுக்க தெரியவில்லை என்றால், தனித்தனியாக வறுத்து கூட, அதன்பின்பு மொத்தமாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பொடி செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் சிறிய உரலில் போட்டு நசுக்கியும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பொடி தான் தக்காளி சட்னிக்கு அதிகப்படியான சுவையை சேர்க்க போகின்றது. ரொம்ப மொழுமொழுவென்று அறைத்துக் கொள்ள வேண்டாம். 90% சதவிகிதம் இந்த பவுடர் அரைந்தால் போதும். இந்த பவுடரும் அப்படியே ஓரமாக இருக்கட்டும். (ஒரு கிலோ தக்காளி பழம் சேர்த்து செய்யும் சட்னிக்கு இந்த மசாலா பவுடர் சரியான அளவாக இருக்கும்.)

tomato1

இறுதியாக ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அது சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு, கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயம் தாளித்து, அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து (குழம்பு மிளகாய்த்தூள் இருந்தால் அதை ஒரு ஸ்பூன் சேர்க்கலாம் வாசம் இன்னும் அதிகமாக வரும்), நன்றாக கலந்து விடவேண்டும். அதன் பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விடுங்கள்.

- Advertisement -

tomato2

தக்காளியில் இருக்கும் தண்ணீர் சுண்டி எண்ணெய் கசிந்து 90% சட்னி தயார் ஆன உடன், முதலில் பொடி செய்து வைத்திருக்கிறோம் அல்லவா? சீரகம் வெந்தயம் கடுகு சேர்த்த பொடியை தக்காளி சட்னியோடு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விட்டு அடுப்பை விட்டு இறக்கினால், கமகம வாசத்தோடு தக்காளி சட்னி தயார். நன்றாக ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த சப்பாத்தி செய்வது இவ்வளவு ஈசியா? 10 நிமிடத்தில் தக்காளி பராத்தா செய்வது எப்படின்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -