இந்த சப்பாத்தி செய்வது இவ்வளவு ஈசியா? 10 நிமிடத்தில் தக்காளி பராத்தா செய்வது எப்படின்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

- Advertisement -

இட்லி தோசை என்று போரடித்து விட்டதா? அதே வரிசையில் இப்போது சப்பாத்தியும் சேர்ந்துவிட்டதா. எது ஒன்றையும் ஒரே மாதிரி சுவையில் தினமும் சாப்பிட்டால் அலுப்பு ஏற்படத்தான் செய்யும். புது விதமாக சில மசாலா பொருட்களை சேர்த்து, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, கொஞ்சம் வித்தியாசமாக தக்காளி சேர்த்த சப்பாத்தியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொஞ்சம் கலர்ஃபுல்லான, காரசாரமான, சுவையான சப்பாத்தி ரெசிபியை பார்த்து விடலாமா.

tomato

Step 1:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு தோலுரித்தது – 5 பல், சீரகம் – 1 ஸ்பூன், மீடியம் சைஸ் தக்காளி பழம் – 2, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், புளிக்காத கெட்டி தயிர் – 1 கப், தேவையான அளவு உப்பு, இவைகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மொழுமொழுவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக இந்த விழுதை அகலமான ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து, அடுத்தபடியாக 250 கிராம் அளவு கோதுமை மாவை இந்த தக்காளி விழுதோடு சேர்த்து, மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் நெய் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரை உள்ளங்கையில் ஊற்றி தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும்.

chappathi1

Step 3:
பிசைந்த இந்த மாவை 5 நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு எப்போதும் போல, சப்பாத்தி மாவு உருண்டைகளை பிடித்து, சப்பாத்தி பலகையில் போட்டு ரொம்பவும் தடிமனாகவும் இல்லாமல், ரொம்பவும் மெல்லிசாகவும் இல்லாமல் தேய்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மையோடு தான் இருக்கும். சப்பாத்தி பலகையின் மேல் கொஞ்சம் மாவு தூவி கொள்ளுங்கள் அல்லது எண்ணெய் ஊற்றி அதன் பின்பு தேய்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 4:
பின்பு தோசைக் கல்லை சூடுபடுத்தி, எண்ணெய் ஊற்றி தான் இந்த சப்பாத்தியை சுடவேண்டும். எண்ணெய் ஊற்றாமல் வெறுமனே சுட்டு எடுத்தால், சப்பாத்தி மொறுமொறுவென்று மாறிவிடும். சப்பாத்தி கல்லில் போட்டு பராத்தாவை அப்படியே விட்டு விடாமல், கரண்டியால் முன் பக்கமும் பின் பக்கமும் திருப்பி திருப்பி போட்டு சிவக்க வைத்து மிருதுவாக சுட்டு எடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. (இந்த சப்பாத்தி மாவை நான்காக மடித்து முக்கோண வடிவத்திலும் சுட்டு எடுக்கலாம். லேயர் லேயராக வரும்.)

chappathi2

சின்ன குழந்தைகள் இந்த சப்பாத்திக்கு சைட் டிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு சுவையும் மணமும் அதிகமாக இருக்கும். தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய் சட்னியை கெட்டியாக அரைத்து சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த சுலபமான புதுவிதமான ரெசிபி பிடித்திருந்தால் இன்று இரவு உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து தான் பாருங்களேன்!

- Advertisement -

dry-chilli-milagai

பின் குறிப்பு: தக்காளி விழுது அரைக்கும்போது, தேவைப்பட்டால் மிளகாய் தூளுக்கு பதிலாக, வர மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம் அல்லது பச்சை மிளகாய் கூட போடலாம். அப்படி இல்லை என்றால் விழுதை அறைத்துவிட்டு சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து இந்த சப்பாத்தியை செய்யலாம். தக்காளியின் புளிப்பு சுவை குறைவாக வேண்டுமென்றால், ஒரு தக்காளியை அரைக்கும் விழுதில் குறைத்து விட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றியும் மாவு பிசைந்து கொள்ளலாம். கோதுமை மாவுக்கு பதிலாக மைதா மாவிலும் இந்த பராத்தா ரெடி பண்ணி கொள்ளலாம். ருசிக்கு ஏற்ப சப்பாத்தி செய்யும் விதத்தை உங்க இஷ்டம் போல் மாற்றிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
வேப்பிலையை வைத்து இவ்வளவு விஷயம் பண்ண முடியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -