ரோகிணி நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

நட்சத்திரங்கள் மொத்தம் 27 இருக்கிறது. எல்லோருமே இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இருக்கும் நான்கு பாதங்களுக்குள்ளாகவே தான் பிறக்கின்றனர். நமது புராணத்தில் விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களையும் சந்திர பகவான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில் சந்திரன் மிகவும் பிரியத்தோடு இருந்த நட்சத்திரம் “ரோகிணி நட்சத்திரம்” ஆகும். இந்த் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் குறித்தும், அவர்கள் தங்கள் வாழ்வில் சிறக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு காண்போம்.

27 நட்சத்திரங்களில் நான்காவதாக வரும் நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் ஆகும். நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக இந்த ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. சந்திரனுக்கு மிகவும் விருப்பமான நட்சத்திரமாகவும் இது இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக “பிரம்ம தேவன்” இருக்கிறார். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகிய முகம் மற்றும் உடலமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மீது உண்மையாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். இத்தகைய குணங்களை கொண்ட ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது உங்களின் வாழ்வில் சிறந்த பலன்களை உண்டாக்கும். மேலும் அதே திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு அரிசி நிவேதனம் வைத்து,மல்லிப்பூக்கள் சமர்ப்பித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் சந்திர பகவானின் நல்லருள் கிடைத்து உங்கள் வாழ்வில் பல யோகங்கள் உண்டாகும்.

feeding fish

முக்கியமான எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பாக உங்கள் தாயாரிடம் ஆசிர்வாதம் பெற்று செல்வது நன்மை உண்டாக்கும். கோயில் குளங்களில் உள்ள மீன்களுக்கு அவ்வப்போது பொரியை உணவாக அளிக்க வேண்டும். உங்கள் உறவுகளில் உள்ள திருமணம் ஆகா இளம் பெண்களுக்கு அவர்களின் பிறந்த நாள் மற்றும் வேறு எதாவது விஷேஷ தினங்களின் போது நைல் பாலிஷ். ஸ்டிக்கர் போட்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றை தானமாக கொடுப்பது சிறப்பான பலனை அளிக்கும் ஒரு பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் ரோகிணி நட்சத்திர தினத்தன்று உங்கள் வாழ்க்கை துணையோடு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவதால் உங்களின் இல்லற வாழ்வு சீரும் சிறப்புகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஞாயிறு விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rohini nakshatra pariharam in Tamil. it is also Chandra bhagavan natchathiram in tamil or Rohini natchathira adhitpathi in Tamil or Rohini natchathiram in Tamil.