இந்த பாட்னர்ஷிப் சச்சின் கங்குலியை நியாபக படுத்துகிறது – சுனில் கவாஸ்கர்

gavaskar

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

bay-oval

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ப்ரேஸ்வெல் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அனைவரும் அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கு கிடைத்தது.

போட்டி முடிந்து மைதானத்தில் பேசிய கவாஸ்கர் : இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இந்திய அணியின் துவக்க ஜோடியும் முக்கிய காரணம். ரோஹித் மற்றும் தவான் இன்று 154 ரன்கள் சேர்த்தனர். அந்த அடித்தளம் மூலம் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை எதிரணிக்கு அளிக்க உதவியது. மேலும், இன்று அவர்கள் 14ஆவது முறையாக 100 ரங்களுக்கு மேல் சேர்ந்து அடித்தனர்.

rohith dhawan

இந்த துவக்க ஜோடியான ரோஹித் மற்றும் தவான் ஜோடி எனக்கு சச்சின் மற்றும் கங்குலி ஆகியோரது ஜோடியினை நியாபக படுத்துகிறது. தொடர்ந்து இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. தவான் மற்றும் ரோஹித் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு அபாரமான வீரர்கள் ஆவார்கள். இந்த ஜோடி நிச்சயம் உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

குல்தீப் யதாவிற்கு மீண்டும் மறுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருது. எந்த வருத்தமும் இல்லை எனக்கு இதுவே போதும் – குல்தீப்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்