அப்பா ஆன இந்திய அணி வீரர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியிலிருந்து விலகல்

team

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அபார அணி இந்த இதனை தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார்.

rohith Hit

ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் ரோஹித் அவரது மனைவி மற்றும் மகளை காண அவர் கடைசி போட்டிக்கு விடுப்பு அளித்து மும்பை திரும்பியுள்ளார். ஜனவரி மாதம் 8ஆம் தேதி மீண்டும் அணியில் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறார்.

அவரின் மகள் பிறந்ததை அடுத்து அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

rohit

புத்தாண்டு பிறக்க இருக்கும் தருவாயில் அவரது மகள் பிறந்து இருப்பதால் ரோஹித் சர்மாவுக்கு இது மறக்கமுடியாத புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

மகள் மற்றும் மனைவியுடன் சென்னை பீச்சில் தல தோனி -வைரல் வீடியோ இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்