தந்தையுடன் மைதானத்தில் அன்பை பகிர்ந்த சென்னை சி.எஸ்.கே அதிரடி வீரரின் மகன் – வீடியோ

csk

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக்பேஷ் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் கூட இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.

watson

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் இந்த தொடரில் கலந்து கொண்டு அதிரடியாக ஆடி வருகிறார். இவர் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சதமடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த வருடம் பிக்பேஷ் போட்டிகளில் விளையாடி வரும் இவர் போட்டியின் போது தனது மகனுடன் மைதானத்தில் தனது அன்பை வெளிக்காட்டினார். இது விடியோவாக வெளியாகி உள்ளது அதில் அவர் தனது மகனுக்கு கையொப்பமிட்டு கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு இதோ :

இன்னும் சில மாதங்களில் சென்னை அணிக்காக விளையாட வாட்சன் தயாராகி வருகிறார். ஓய்வு பெற்ற பிறகும் இவரை போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

தோனியின் மெதுவான பேட்டிங் குறித்த கருத்தினை பற்றி பேசிய கோலி – பதிவு உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்