ப்ளீஸ் வேற எதுவும் பேச வேண்டாம். தோல்விக்கு முழுகாரணமும் இதுதான் வெளிப்படையாக பேசிய – கேப்டன் ரோஹித்

rohith-sad

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

ross taylor

அந்த அணி வெறும் 14.4 ஓவர்களில் 93 ரன்கள் அடித்து இந்திய அணியை விரைவில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்தது. நியூசிலாந்து தரப்பில் டெய்லர் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான போல்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும், இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும் போல்ட் தட்டிச்சென்றார்.

பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா : மிக நீண்ட காலத்திற்கு பிறகு இது ஒரு மோசமான பேட்டிங் செயல்பாடு என்று நினைக்கிறன். இந்திய அணி பேட்டிங் வீரர்களுக்கு மியூசிலாந்து அணி வீரர்கள் சிறந்த பாடத்தை எங்களுக்கு கற்றுத்தந்துள்ளனர். இதுபோன்ற ஸ்விங் ஆடுகளங்களில் ஆட்டத்தின் போக்கினை கணித்து ரன்களை சேகரிக்கவும், விக்கெட் இழக்காமல் இருக்கவும் இந்திய அணி வீரர்கள், கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், தேசிய அணிக்காக ஆடும் ஒருவீரர் தனது முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும். ஒரு சிறந்த அணியானது சரியான கட்டங்களை டிக் செய்து கொண்டே வரும். அனால், இன்று நாம் தவறான கட்டத்தினை டிக் செய்துள்ளோம். இந்த வெற்றிக்கு முழுக்காரணம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களையே சேரும். தோல்விக்கு முழுகாரணமும் நம்மையே சேரும் வேறு எந்த காரணத்தினையும் இந்த போட்டி குறித்து கூறுவது தவறு. இந்த தோல்விக்கு அணி வீரர்களாகிய நாம் அனைவருமே முழு காரணம் என்று ரோஹித் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

மூன்று ஆட்டங்களாக நாங்கள் நினைத்ததை இன்றுதான் சிறப்பாக செய்தோம் என்று நினைக்கிறன். வெற்றியின் காரணத்தை கூறிய – கேன் வில்லியம்சன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்