மூன்று ஆட்டங்களாக நாங்கள் நினைத்ததை இன்றுதான் சிறப்பாக செய்தோம் என்று நினைக்கிறன். வெற்றியின் காரணத்தை கூறிய – கேன் வில்லியம்சன்

kane-williamson

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

boult

அந்த அணி வெறும் 14.4 ஓவர்களில் இந்திய அணி விரைவில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்தது. நியூசிலாந்து தரப்பில் டெய்லர் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான போல்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும், இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

பின்னர் பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் : மைதானம் இந்த அளவிற்கு எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில பந்துகளை வீசினார்கள். பந்தும் நன்றாக திரும்பியது. கடந்த மூன்று ஆட்டங்களாக துவக்க விக்கெட்டை விரைவில் வீழ்த்த முடியாமல் திணறினோம். ஆனால், இந்தியா போட்டியில் துவக்க ஜோடியினை விரைவில் வீழ்த்தினோம்.

அதுமட்டுமின்றி அடுத்து வந்த வீரர்களையும் சீரான இடைவெளியில் வீழ்த்தி இந்திய அணிக்கு சரியான அழுத்தத்தை இந்த போட்டியில் கொடுத்தோம். அதனால் இந்திய அணியை 92 ரன்களில் ஆட்டமிழக்க செய்தோம். பின்னர் களமிறங்கி இந்த இலக்கினை அடித்தது சிறப்பானது. இன்றைய பொடியன் வெற்றி சிறப்பானதாக உணர்கிறேன். இந்தியா போன்ற அணிக்கு எதிரான இந்த போட்டி எங்களுக்கு சிறப்பான ஒன்றாகும் என்று தெரிவித்தார் வில்லியம்சன்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam
இதையும் படிக்கலாமே :

மைதானத்தின் தன்மை மற்றும் நாங்கள் எடுத்த இந்த முடிவே சிறந்த வெற்றிக்கு காரணம் – ஆட்டநாயகன் ட்ரென்ட் போல்ட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்