கடந்த இரு போட்டிகளாக ரோஹித் அணிந்த ஜெர்ஸி யாருடையது தெரியுமா. அவர் ஏன் அவருடைய ஜெர்சியை அணியவில்லை தெரியுமா ?

Rohith

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

rohith dhawan

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

இந்நிலையில் கடந்த இரு ஆட்டங்களாக ரோஹித் சர்மா தனது ஜெர்ஸியை அணிந்து விளையாடாதது குறித்து தற்போது ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். கடந்த இரு போட்டிகளாக ரோஹித் சர்மா 59 நம்பர் ஜெர்ஸி அணிந்து விளையாடினார். ரோஹித் சர்மாவின் உண்மையான ஜெர்ஸி நம்பர் 45 ஆகும் அப்படி இருக்கையில் 59 நம்பர் ஜெர்ஸி யாருடையது எதற்காக அணிந்தார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

Rohith sharma

இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், 59 ஆம் நம்பர் ஜெர்ஸி விஜய் ஷங்கர் உடைய ஜெர்ஸி ஆகும். அவரின் ஜெர்ஸியை கடந்த போட்டியிலும் அதற்கு முந்தய போட்டியில் 33 ஆம் நம்பர் ஹார்டிக் பாண்டியா ஜெர்ஸியை அணிந்து ரோஹித் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஜஸ்ட் மிஸ் – இவர் நாட் அவுட்டாக இருக்கும்போது இந்திய அணி தோற்றது இதுவே முதல் முறை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்