கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஜஸ்ட் மிஸ் – இவர் நாட் அவுட்டாக இருக்கும்போது இந்திய அணி தோற்றது இதுவே முதல் முறை

Team

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Dinesh

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் 16 பந்தில் 4 சிக்ஸர்கள் உடன் 33 ரன்கள் அடித்து கடைசிவரை வெற்றிக்காக போராடினார். இவரின் இந்த ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரும் குருனால் பாண்டியாவும் சேர்ந்து கடைசி 28 பந்தில் அதிரடியாக 63 ரன்களை சேர்த்தனர். இவர்களது ஆட்டம் எதிரணியை கலங்கடித்து என்றே கூறலாம்.

dhoni karthick

இதுவரை இந்திய அணிக்காக 30 டி20 போட்டிகளில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த போட்டியில் இந்திய அணி தோற்றது இதுவே முதல்முறை. இந்திய அணிக்காக கடந்த சில போட்டிகளாக கார்த்திக் சிறப்பாக பினிஷிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தோனிக்கு நேற்று நடந்த போட்டியே நியூசிலாந்தில் கடைசி போட்டி என்பதால் தல தோனிக்கு நெகிழ்ச்சியான பிரியாவிடை கொடுத்த நியூசி ரசிகர்கள் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்