பொக்கேவில் கொத்துக்கொத்தாக மலர்களை அடுக்கி வைத்து இருப்பது போல, அடர்ந்த வண்ணத்தில் உங்களுடைய வீட்டு பூச்செடிகளிலும், ரோஜா பூக்கள் கொத்துக் கொத்தாக பூக்கும். இதை மட்டும் 1 டம்ளர் ஊற்றி பாருங்க!

rose
- Advertisement -

சில பேர் வீட்டில் ரோஜா பூ செடியில் பூக்கள் பூக்கும். ஆனால், அதனுடைய வண்ணம் அடர்ந்த சிவப்பு நிறமாக, அடர்ந்த மஞ்சள் நிறமாக இருக்காது. அதில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பது போல தோன்றும். இதே போல் தான் இலைகளும் பச்சை பசேலென்று நிறைவான அழகை கொடுக்காது. கொஞ்சம் பழுப்பு நிறத்தில் இருக்கும். இப்படியாக உங்க வீட்டில் இருக்கும் ரோஜா செடிகளின் நிறத்தில் பிரச்சனை இருந்தாலும் சரி, உங்களுடைய வீட்டு ரோஜா பூச்செடி ஊட்டச்சத்து குறைவு காரணமாக நிறைய பூக்களை கொடுக்காவிட்டாலும் சரி, இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி பாருங்க! எண்ணி 30 நாட்களில் உங்களுடைய வீட்டில் இருக்கும் பூச்செடி நிச்சயமாக கொத்து கொத்தாக பூத்து குலுங்கும் என்ற உறுதியோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

முதலில் ரோஜா செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரை நீங்கள் பக்குவமாக ஊற்றவேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. அதேசமயம் மண் உலர்ந்து போகவும் கூடாது. மண்ணை உங்களது கையில் எடுத்தால் உதிரி உதிரியாக இருக்க வேண்டும். ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும். வேரில் மட்டும் தண்ணீர் ஊற்றாமல், ஸ்பிரே பாட்டிலில் இலைகளில் படும்படி தண்ணீரைத் தெளிப்பது ரோஜா செடியை செழிப்பாக வளர உதவியாக இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக, எப்சம் உப்பு என்று சொல்லப்படும் epsom salt இதை ரோஜா செடிக்கு மாதத்தில் ஒரு நாள் போட வேண்டும். இந்த எப்சம் உப்பானது மளிகை கடைகளில் கிடைக்காது. மருந்தகங்களில் கட்டாயம் கிடைக்கும். இந்த எப்சம் உப்பை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். மாதம் ஒரு முறை 1 டேபிள் ஸ்பூன் அளவு எப்சம் சால்டை, 1 டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஸ்பிரே பாட்டிலில் 3 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, இந்த எப்சம் தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் குலுக்கி செடிகளின் வேர் இலை மொட்டு எல்லா இடத்தில் படும்படி ஸ்ப்ரே செய்து விடவேண்டும். மாதத்தில் ஒரு முறை உங்கள் செடிகளுக்கு இதை பயன்படுத்தலாம்.

meal-maker

அடுத்தபடியாக, நாம் எல்லோருக்கும் தெரிந்த சோயா அல்லது மீல் மேக்கர், சமைப்பதற்காக பயன்படுத்துவோம் அல்லவா இதை ஐந்திலிருந்து ஆறு என்ற எண்ணிக்கையில் எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சோயா பொடியை, ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் நன்றாக கலந்து விட்டு அதை வடிகட்டிக் கொள்ளுங்கள். நன்றாக ஊறிய பின்பு தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த சோயா ஊறிய தண்ணீரை, 2 லிட்டர் தண்ணீரில் கலந்து உங்களுடைய செடிகளுக்கு ஸ்ப்ரே செய்யலாம்.

- Advertisement -

மூன்றாவதாக நாம் குடிப்பதற்காக பயன்படுத்தும் காப்பி பவுடரை செடிகளுக்கு போட்டால் மிகவும் நல்லது என்று சொல்லி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். அது சரி தான். இருப்பினும் ஃபில்டர் காபிக்காக பயன்படுத்திவிட்டு மீதமிருக்கும் அந்த திப்பியை, நன்றாக உலரவைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு முறை, ஒரு டம்ளர் அளவு தண்ணீருக்கு, சேமித்து வைத்திருக்கும் பில்டர் காபி பவுடரில் இருந்து எடுத்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை அப்படியே வேர்ப்பகுதியில் ஊற்றினால் செடி மிக மிக ஆரோக்கியமாக வளரும்.

panner-rose

இப்படியாகத் தொடர்ந்து, ஒரு நாள் எப்சம் உப்பு போடுங்கள், 15 நாள் கழித்து சோயா கலந்த தண்ணீரை ஊற்றுங்கள், மீண்டும் 15 நாட்கள் கழித்து முடிந்தால் காபி பவுடரை பயன்படுத்தி பாருங்கள். காபி பவுடர் உங்களுக்கு கிடைக்கவில்லை, உங்களுடைய வீட்டில் பில்டர் காபி தூள் இல்லை என்றால், வாழைப்பழத் தோல்களை துண்டு துண்டாக கட் பண்ணி, தண்ணீரில் போட்டு இரண்டு நாட்கள் வரை ஊறவைத்து விட்டு, அந்த தண்ணீரை வடிகட்டி ஊற்றலாம். இப்படியாக இந்த பொருட்களில் எந்த பொருள் உங்களுக்கு கிடைத்தாலும் அதை உங்களுடைய செடிகளுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீராக ஊற்றி பாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டு ரோஜா செடிகளும் கொத்துக் கொத்தாக கட்டாயம் பூக்கும்.

- Advertisement -