2 நிமிசத்துல தக்காளியே சேர்க்காம ரோட்டு கடை ஸ்டைலில் சூப்பரான இந்த கார சட்னியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா? இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தா எவ்வளவு செஞ்சாலும் பத்தாது.

Road Side Kara Chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு எத்தனை வகை சைட் டிஷ் செய்தாலுமே கூட சுலபமாக சட்டுனு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டால் நிச்சயம் நாம் சட்னியை தான் தேர்ந்தெடுப்போம். அந்த வகையில் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு அருமையான ரோட்டு கடை ஸ்டைல் கார சட்னியை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். இந்த சட்னி அரைக்க தக்காளி கூட தேவையே இல்லை. அவசர நேரத்தில் செய்யக் கூடிய சிம்பிள் சட்னி ரெசிபி.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, காஸ்மீரி மிளகாய் – 4, உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன், புளி – சிறிதளவு, உப்பு -1/4 டீஸ்பூன், கடுகு -2 டீஸ்பூன், கருவேப்பிலை – 1கொத்து, எண்ணெய் – 2டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி தாளிக்க வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பூண்டு, மிளகாய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு கொள்ளுங்கள்.

இப்போது இத்துடன் உளுத்தம் பருப்பு , புளி இரண்டையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு உப்பையும் சேர்த்து ஒரு முறை கலந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரில் இவை எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை சட்னியில் உற்றி கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இப்படியும் புரோட்டின் சத்து நிறைந்த தோசையை சுலபமாக சுவையாக செய்யலாம். காலை பிரேக் ஃபாஸ்டை ஈசியாக்க, இந்த ரெசிபியையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தால் எத்தனை சாப்பிட்டோம் என்று உங்களுக்கே கணக்கு தெரியாது. அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த சட்னியை நீங்களும் ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -