இப்படியும் புரோட்டின் சத்து நிறைந்த தோசையை சுலபமாக சுவையாக செய்யலாம். காலை பிரேக் ஃபாஸ்டை ஈசியாக்க, இந்த ரெசிபியையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

dosai1
- Advertisement -

காலையில் எப்போதும் போல அரிசி மாவு, உளுந்து மாவு சேர்த்த தோசையை சுடாமல், இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வேறு ஏதாவது பயறு வகைகளை சேர்த்து தோசை சுட்டு சாப்பிட்டால் நிறைவாக இருக்கும் அல்லவா. காராமணி வைத்து சூப்பராக ஒரு தோசை சுடுவது எப்படி என்பதை பற்றிய சமையல் குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெள்ளை நிறத்தில் இருக்கும் காராமணியை இந்த தோசைக்கு பயன்படுத்தலாம். சிவப்பு நிறத்தில் இருக்கும் காராமணியையும் பயன்படுத்தலாம். ஆனால், தோசையின் நிறம் கொஞ்சம் வித்தியாசப்படும். வாங்க நேரத்தை கலக்காமல் இந்த ஆரோக்கியம் தரும் சமையல் குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு முதலில் 1 டம்ளர் அளவு இட்லி அரிசி, 1/2 டம்ளர் அளவு காராமணி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக போட்டு நன்றாக தழுவி நல்ல தண்ணீரை ஊற்றி 4 லிருந்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ஊற வைத்த அரிசி காராமணியை போட்டு, இதனோடு தோல் சீவியை இஞ்சி 1 இன்ச், பச்சை மிளகாய் 3, தேவைப்பட்டால் கருவேப்பிலை 2 கொத்து, சீரகம் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை அரைத்துக் கொள்ளுங்கள். அதாவது தோசை மாவு பக்குவத்திற்கு இந்த மாவை அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த மாவை அப்படியே உடனடியாக தோசை வார்த்தாலும் சுவையாக தான் இருக்கும் அப்படி இல்லை என்றால் 2 மணி நேரம் புளிக்க விட்டு, தோசை வார்க்கலாம். மீதம் இருக்கும் மாவை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தும் அடுத்த நாளுக்கு பயன்படுத்தலாம். எப்போதும் போல அரிசி மாவு தோசை வார்போம் அல்லவா. அதேபோல இந்த மாவை மெல்லிசாக தீட்ட முடியும்.

- Advertisement -

மிதமான தீயில் இந்த தோசையை வேகவைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிவக்க விட்டு மீண்டும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சூப்பரான காராமணி தோசை தயார். தேவைப்பட்டால் இதில் நெய் ஊற்றி சுட்டும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உடலுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம்.

இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் தேங்காய் சட்னி இப்படி எது வேண்டுமென்றால் பரிமாறலாம். அது நம்முடைய விருப்பம் தான். குறிப்பாக இதற்கு இஞ்சி சட்னி அரைத்தால் ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும்.

- Advertisement -

ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், வரமிளகாய் 3, நறுக்கிய இஞ்சி 1/2 கைப்பிடி, அளவு போட்டு கருவேப்பிலை 4 கொத்து போட்டு ஒரு சின்ன துண்டு புளி, போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். பருப்பு வகைகள் நன்றாக சிவந்து இஞ்சி லேசாக வதங்கி வந்தவுடன் இதில் 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து இந்த தோசைக்கு பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி சமைக்கத் தெரியாதவர்கள் சாம்பார் வைத்தால் கூட அது, அமிர்தமாக சுவையாக தான் இருக்கும். வீட்டிலேயே மிக்ஸி ஜாரில் அரைக்கும் இந்த சாம்பார் பொடியின் ரகசிய குறிப்பு உங்களுக்கு தெரிந்தால்.

இந்த அருமையான எளிமையான ஆரோக்கியம் தரும் சமையல் குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக உணவு சமைத்துக் கொடுத்த திருப்தியும் இல்லத்தரசிகளுக்கு இருக்கும்.

- Advertisement -