மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தா ? பரிகாரம் செய்யும் மக்கள்

Rumour about fire accident

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் சில தினங்களுக்கு முன்பு கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருள் சேதம் உட்பட ஏராளமான புறாக்களும் இறந்தன. இந்த நிலையில் தீ விபத்தால் தமிழகத்தில் உள்ள  குழந்தைகளுக்கு ஆபத்து நேரும் என்றொரு வதந்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பரவி வருகிறது.

parikaram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபத்தூர் என்னும் ஊரில் இந்த வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அம்மன் கோயிலிற்கு சென்று வளையலை காணிக்கையாக செலுத்த வேண்டும் என்றும், ஆண் குழந்தைகள் இருந்தால், எண்ணிக்கைக்கு ஏற்ப வீட்டின் முன்பு விளக்கேற்ற வேண்டும் என்றும் வதந்தி பரவி வருகிறது. இதனால் குழந்தைகளை வைத்துள்ளோர் அச்சம் கொண்டு பரிகாரத்தை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
கடும் தீயிலும் கருகாத நந்தியின் மாலை – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதிசயம்

ஜோதிடர்கள் யாரும் தீ விபத்து குறித்து இது போன்ற பரிகாரங்களை சொல்லாத நிலையில் இது வெறும் வதந்தியே என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து அரசியல் ரீதியாக சில சிக்கல்களை விலைக்கும் என்றே ஜோதிடர்கள் கனிந்துள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவும் வதந்தி யாரிடம் இருந்து தொடங்கியது என்று தெரியவில்லை.