- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalருண விமோசன பிரதோஷ வழிபாடு

ருண விமோசன பிரதோஷ வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய பிரதோஷத்திற்கு அதிக அளவில் பலன் உண்டாகும். மேலும் அந்த பிரதோஷம் வரக்கூடிய நாளை பொருத்தும், கிழமையை பொருத்தும், நட்சத்திரத்தை பொருத்தும் அதனுடைய பலன் சற்று வேறுபடும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடும் திருவோண நட்சத்திரத்தோடும் வரக்கூடிய பிரதோஷ நாள். அன்று செய்யவேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ருண விமோசன பிரதோஷ வழிபாடு

திருவோண நட்சத்திரம் என்பது பெருமாளுக்கு உரிய நட்சத்திரமாக திகழ்கிறது. செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய திதியாக கருதப்படுகிறது. இப்படி சிவபெருமான், பெருமாள், முருகன் இவர்கள் மூவரின் அருளும் ஒருசேர கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய சில எளிமையான வழிபாடுகள் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்.

- Advertisement -

அன்றைய நாளில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பிரதோஷ தினத்தன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் விரதத்தை தொடங்கிக் கொள்ளலாம். விரதம் இருக்காமல் வழிபாடு மட்டும் செய்யப் போகிறோம் என்பவர்களும் அன்றைய தினத்தில் இறைவனை வணங்கி தங்களுடைய நாளை தொடங்கலாம். பொதுவாகவே பிரதோஷ நாளன்று மாலை 4:30 மணியில் இருந்து 6:00 மணிக்குள் அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு என்பது நடைபெறும். இந்த பிரதோஷ நேரத்திற்கு முன்பாக வரக்கூடிய ராகு காலமான 3:00 மணியிலிருந்து 4:30 மணிக்குள் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை நம்முடைய கடன் பிரச்சினையை தீர்த்து விடும்.

இதற்கு நமக்கு மஞ்சள், பிரியாணி இலை, குங்குமம் மற்றும் புனுகு வேண்டும். சரியாக ராகு காலம் தொடங்கும் பொழுது வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு உங்களுக்கு எத்தனை கடன்கள் இருக்கிறதோ அதற்கேற்றார் போல் பிரியாணி இலையை எடுத்து ஒவ்வொரு பிரியாணி இலையிலும் யாரிடமிருந்து எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான புனுகை அந்த ஒவ்வொரு பிரியாணி இலையிலும் தடவி அதை அப்படியே ஒன்றோடு ஒன்றாக சேர்த்து வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு வெற்றிலையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலையில் முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மஞ்சளில் சிவலிங்கத்தையும் மஞ்சளில் நந்தியையும் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சுத்தமான தாழம்பூ குங்குமத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தாழம்பூ குங்குமத்தால் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் நமசிவாய நமநமசிவாய சிவ சிவ சிவாய நம ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு “ஓம் சந்திரமௌலீஸ்வராய நம” என்னும் மந்திரத்தையும் “ஓம் ருண விமோசனாய நம” என்னும் மந்திரத்தையும் 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு சிவபெருமானுக்கு ஒரே ஒரு வில்வ இலையை மட்டுமாவது சமர்ப்பணம் செய்துவிட்டு உங்களுடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று முழு மனதோடு வழிபாடு செய்து கொள்ள வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வழிப்பாட்டை நிறைவு செய்யும் பொழுது கற்பூர தீபம் காட்டுவோம் அல்லவா அந்த தீபத்திலேயே நாம் எழுதி வைத்திருந்த அந்த பிரியாணி இலையை எரித்து விட வேண்டும். பிறகு நாம் பிடித்து வைத்திருக்கும் மஞ்சளை சிறிதளவு தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். 11 ரூபாயில் இந்த மஞ்சளை தடவி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு மீதம் இருக்கும் மஞ்சளை உங்களுடைய நிலை வாசலில் தடவி அர்ச்சனை செய்த குங்குமத்தை நிலை வாசலுக்கு வைத்து விட வேண்டும். இந்த மஞ்சள் சிவ கடாட்சத்தை நம் வீட்டிற்குள் அழைக்க கூடியது என்பதால் நிலை வாசலுக்கு மேலே மஞ்சளை தடவி குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:25-02-2025 ருண விமோசன பிரதோஷ பரிகாரம்

இப்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த வழிபாடு சிவபெருமான், முருகப்பெருமான் மற்றும் பெருமாளின் அருளை பரிபூரணமாக பெற செய்து கடன் பிரச்சினை தீர்வதற்கும் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படவும் வழி வகுத்து கொடுக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்