கடன் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் பலன்கள்

Runa vimosana pradosham Sivan
- Advertisement -

இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஆள்பவர் இறைவன். அந்த இறைவன் பல உருவங்களாகவும், அதே நேரத்தில் உருவமில்லாதவனாகவும் இருக்கிறான் என்கிற மெய்ஞ்ஞான உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள். இந்நாட்டு மக்கள் வழிபட்டு நலம் பெற ஆகம விதி படி கோவில்களையும் உருவாக்கினர். அக்கோவிலிகளில் சில குறிப்பிட்ட தினங்களில் இறைவனை வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் ஏற்படுவதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்தனர். அந்த வகையில் சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய நாளான பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதில் செவ்வாய் கிழமையில் வரும் ருண விமோசன பிரதோஷம் குறித்த சிறப்புக்கள் பற்றியும் அதனால் ஏற்படும் மிகப்பெரிய நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.

Sivan

ருண விமோசன பிரதோஷம்

பொதுவாக பிரதோஷங்களில் “சனி பிரதோஷம்” மிக சிறப்பானதாகும். ஆனால் அந்த சனி பிரதோஷத்திற்கு நிகரான ஆற்றல் வாய்ந்த ஓரு பிரதோஷ தினம் செவ்வாய் கிழமை அன்று வரும் “ருண விமோசன பிரதோஷம்”. “ருணம்” என்பது நமக்கு ஏற்படக்கூடிய நோய் என்பதை குறிக்கும் என்றாலும், கடன் மற்றும் எதிரிகளையும் இது குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு வகையில் பணத்தை கடனாக பெற்று அதை வட்டியுடன் முதலையும் சேர்த்து கட்டி தீர்ப்பதற்குளாக அவர்களின் பாதி வாழ்நாள் தீர்ந்து விடுகிறது. “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என கடன் வாங்கியர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என கம்பராமாயணத்தில் மிக தெளிவாக கூறியுள்ளார் “கவிச் சக்ரவத்தி கம்பன்”. இப்படி கடன் வாங்கியவர்கள் ஓரளவு அந்த கடனை வட்டியுடன் கட்டிவிட்டாலும், வேறு வகையில் மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் இந்த “ருண விமோசன பிரதோஷ” தினத்தன்று “ஸ்ரீ நரசிம்மரை” வழிபடுவது சிறந்தது.

Narasimmar

பொதுவாக சிவனுக்குரிய பிரதோஷ தினத்தன்று திருமாலை வழிபடக்கூடாது என்று ஒரு வழக்கம் உண்டு. ஆனால் அதற்கு இந்த “ருண விமோசன பிரதோஷம்” ஒரு விதி விளக்காகும். ஏனெனில் இந்த பிரதோஷ நேரத்தில் தான் நரசிம்ம மூர்த்தி அரக்கர் குல தலைவனான ஹிரண்யகசிபுவை வதம் புரிந்தார். எனவே இந்த பிரதோஷ காலத்தில் நரசிம்மரை வழிபடுவதால் நம்முடைய கடன் பிரச்சனைகள் தீருவது மட்டுமின்றி நமக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லை, தீய சக்திகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மற்றும் கொடிய நோய்களின் பாதிப்புகள் நீங்கும்.

- Advertisement -

பொதுவான பிரதோஷ வழிபாடு பலன்கள்

பிரதோஷ தினத்தன்று மாலை வேளையில் சிவன் கோவில்களில் நடக்கும் வழிபாடுகளில் சிவ பெருமானின் வாகனமான “நந்தி பகவானுக்கு” அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில் எப்போதும் தனது தேவன் சிவ பெருமானின் சேவையிலேயே இருக்கும் நந்தி பகவான், இந்த பிரதோஷ வேளையின் போது கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் கோரிக்கைகளை நேரடியாக அந்த சிவ பெருமானிடம் கொண்டு சேர்ப்பதாக ஐதீகம்.

Siva lingam

பிரதோஷ காலத்தில்தான் உலகை காக்க சிவ பெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார். எனவே இக்காலத்தில் சிவ பெருமானை வழிபடுவதால் நமக்கு துன்பங்களை தரும் நோய், வறுமை போன்றவற்றை நீக்குகிறார். இப்பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அக்கோயிலை பிரதோஷ பிரதிட்சணம் வளம் வந்து, நந்தி தேவருக்கு அருகம்புல், சந்தனம், பூக்கள் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்து அவரை வணங்கினால், நமக்கு பிறப்பில் ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷங்களும் நீங்கும். வானுலகில் வாழும் தேவர்களின் ஆசியும் நமக்கு கிட்டும். மேலும் நமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார தேக்க நிலை நீங்கும். வறுமை நிலை வராமல் காக்கும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வரும் உடல் பாதிப்புகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
2018 ஆம் ஆண்டின் பிரதோஷ நாட்கள் எவை, பிரதோஷ நேரம் என்ன தெரியுமா?

English Overview:
The Prodhosam day which falls on Tuesday is called as Runa vimochana pradosham. here we will see the benefits of Runa vimochana pradosham in Tamil.

- Advertisement -