மதியம் வடித்த சாதம், ராத்திரி நேரம் வரை கொச கொச வென்று ஆகாமல் ஃபிரஷாகவே இருக்க, சாதத்தை இப்படி வடித்து பாருங்கள்!

rice
- Advertisement -

நிறைய பேர் சாதத்தை இப்போது குக்கரில் வைத்து தான் சமைக்கிறார்கள். ஆனால், சாப்பாட்டை குண்டானில் உலை வைத்து, அரிசியை போட்டு வேக வைத்து, வடித்து சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நீங்கள் சாப்பாட்டை குண்டானில் வைத்து வடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், மதியம் வைத்த சாதம், ராத்திரி நேரத்தில் தண்ணீர் விட்டது போல கொசகொசவென்று மாறி விடுகிறது என்றால், இந்த பிரச்சினைக்கும் தீர்வுகாண சில குறிப்புகள் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது. தேவை உள்ளவர்கள் படித்து பயன் அடையலாம்.

annapoorani-rice

சாதம் கொச கொசவென்று நொந்து போவதற்கு முதல் காரணம் அரிசிக்கு தகுந்தவாறு தண்ணீர் இல்லை என்பது தான். அதாவது உலையில் தண்ணீரை நிறைய வைக்க வேண்டும். உலை லேசாக கொதி வந்ததும், அரிசியை உலையில் சேர்த்தால் தண்ணீர் நிரம்பி வழியும் அளவிற்கு கட்டாயம் இருக்க வேண்டும். சாதம் வேகும்போது தண்ணீர் பற்றாக்குறை ஆகிவிட்டால் நிச்சயம் சாதம் நொந்து போகத்தான் செய்யும்.

- Advertisement -

உலை நீர் அதிகமாக வழிந்தால் கூட பரவாயில்லை. ஒரு சிறிய டம்ளரில் எடுத்து, ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். சாதம் வெந்து வரும் பக்குவத்தில், தண்ணீர் குறையும் பட்சத்தில் தனியாக எடுத்து வைத்த தண்ணீர் சேர்த்து வடிக்கும், பட்சத்தில் சாதம் கொசகொசவென்று மாறாமல் இருக்கும்.

rice1

அடுத்தபடியாக சாதம் கொதி வந்த பிறகு, அடுப்பை முழுமையாக சிம்மில் வைத்து விடக்கூடாது. மிதமான தீயில் உலை தளதளவென கொதித்து தான் அரிசி வேக வேண்டும். தேவைப்படுபவர்கள் சாதத்தில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். சில பேருக்கு உப்பு சேர்க்கும் பழக்கம் இருக்காது. ஆனால் சாதம் நன்றாக கொதி வந்த பிறகு ஒரு ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றினால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நன்றாக வெந்து வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சாதம் கொதிக்க ஆரம்பித்த தொடங்கிய பின்பு, கரண்டியை விட்டு அடிக்கடி கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

- Advertisement -

சாதம் சரியான பக்குவத்திற்கு வெந்ததும், உலை பானையை வடித்து விட வேண்டும். பத்து நிமிடங்கள் வரை சாதம் நன்றாக வடிந்தால் தான் எல்லா கஞ்சி தண்ணீரும் வெளியே வடிந்திருக்கும். பத்து நிமிடத்திற்கு முன்பாக சாதத்தை நிமித்தாதீர்கள்.

rice2

வடித்த கஞ்சி தண்ணீர் நீர்ம பதத்தில் இருக்கும் பட்சத்தில் உங்கள் சாதமும் சரியான பக்குவத்தில் வெந்திருக்கிறது என்பது அர்த்தம். வடித்த கஞ்சி தண்ணீர் கட்டினால், வடித்த சாதத்தில் பிரச்சனை உள்ளது. இரவு நேரத்தில் கொசகொசவென்று மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

rice3

பரவாயில்லை! சில சமயங்களில் சாதம் வேகவைத்து வடிக்கும் பதம் தவறுவது இயல்புதான். இப்படி அடி சாதம் உங்களுக்கு தண்ணீர் பிடிப்பது போல இருந்தால், சாப்பாட்டு பானையை கஞ்சி தண்ணீர் வடித்து நிமித்திய பின்பு, அப்படியே அடுப்பின் மீது வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். ஒரு நிமிடம் வடித்த சாதத்தை சூட்டோடு அடுப்பின் மேலே வைத்து விட்டீர்கள் என்றால், அடியில் இருக்கும் தண்ணீர் சுண்டி விடும். சாதம் சரியான பக்குவத்திற்கு வந்து விடும்.

hot-pack

உங்களுக்கு இப்படி பதம் தவறும் பட்சத்தில், மேலிருக்கும் சாதத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி, இரவு நேரத்திற்கு எடுத்து வைத்து விட்டு, மதியம் அடி சாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை. உங்களுக்கு சாதத்தை ஹாட் பேக்கில் கொட்டி ஸ்டோர் செய்யும் பழக்கம் இருந்தால், சுடச்சுட சாதத்தை ஹாட் பேக்கில் கொட்டி, சாதத்தின் மேல் சுத்தமான காட்டன் துணியை போட்டு விட்டு, அதன் பின்பு மேலே மூடியை மூடி வைக்க வேண்டும். இப்படி செய்தால் மேலே ஆவிரி தண்ணீர் சாதத்தில் விழுந்து வீணாகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை கொண்டு பழைய வெள்ளி கொலுசு மற்றும் நகைகளை கை கூட வைக்காமல் வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ! அதே போல மாற்றி விடலாமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -