இந்த 1 பொருளை கொண்டு பழைய வெள்ளி கொலுசு மற்றும் நகைகளை கை கூட வைக்காமல் வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ! அதே போல மாற்றி விடலாமே!

silver-tablet

வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளியால் ஆன நகைகளை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். பித்தளை, செம்பு பொருட்களை கூட சுலபமாக சுத்தம் செய்து விடலாம். ஆனால் வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. அதிலும் வெள்ளிப் பொருட்கள் மீது அதிக கவனமும் தேவை இருக்கிறது. வெள்ளி தேய்மானம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமல்லவா? இந்த ஒரு பொருளை வைத்து புதிதாக வாங்கிய கொலுசு அல்லது நகைகள் போல தகதகவென மின்ன செய்ய முடியும். அதை எப்படி செய்ய வேண்டும்? எந்த பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

silver

வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளி நகைகள் அல்லது நீங்கள் காலில் அணிந்திருக்கும் வெள்ளி கொலுசு போன்ற எந்த வகையான வெள்ளிப் பொருட்கள் உங்களிடம் இருந்தாலும் அதில் நாள்பட்ட பின்பு கருமை படர்ந்து விடும். இதனால் வெள்ளிப் பொருள்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்ய அதிகம் சிரமப்படாமல் பத்து நிமிடத்தில் புத்தம் புதிய வெள்ளி பொருட்களாக மாற்றுவது எப்படி? என இனி பார்ப்போம்.

நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் அலுமினியம் கொண்டு செய்யப்படும் இந்த மாத்திரை உரைகள் அழுக்குகளை நீக்கும் தன்மை கொண்டுள்ளது. இது அலுமினியத்தால் செய்யப்படுவதால் எளிதாக வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்யும். பெரும்பாலும் மாத்திரை அட்டைகள் அலுமினியத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். அந்த அட்டைகளை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அதனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக கத்தரித்துக் கொள்ளுங்கள்.

tablet-cover

பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சுத்தமான தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் கத்தரித்த மாத்திரை உரைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு 5 நிமிடம் நன்கு கொதித்த பின் நீங்கள் சுத்தமாக்க நினைக்கும் வெள்ளிப் பொருட்களை அதில் போட வேண்டும். பின்னர் பேக்கிங் சோடா ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பாத்திரத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவை கூட குறைத்து சேர்த்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

மீண்டும் ஒரு 5 நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். அந்த அலுமினியம் பேப்பரில் இருக்கும் ஆற்றலும், பேக்கிங் சோடாவினுடைய தன்மையும் வெள்ளி பொருட்களை மிக அழகாக சுத்தம் செய்து கொடுக்கும். சிறு சிறு துவாரங்களில் கூட இந்த ஆற்றல் செயல்பட்டு பார்ப்பதற்கு பளிச்சென்று மாற்றிக் கொடுக்கும்.

silver-things

அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த செயல்முறையை நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து பயன் அடையலாம். இறுதியாக சூடான தண்ணீரில் இருக்கும் வெள்ளி பொருட்களை, நல்ல தண்ணீரில் போட்டு ஒரு முறை கைகளால் தேய்த்து விட்டால் போதும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய கறுத்த வெள்ளி பொருட்கள் புதியது போல் தகதகவென மின்னும்.

இதையும் படிக்கலாமே
5 நாட்களில், உங்கள் வீட்டில் ரோஜா செடி புதிய துளிர்விட்டு, நிறைய மொட்டுக்கள் வைத்து கொத்துக் கொத்தாக பூக்க, இத மட்டும் செஞ்சா போதும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.